பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாவேந்தரின் பாட்டுத்திறன் கண்டவர் செட்டிநாட்டு அண்ணாமலை அரசர். அவரைப் பற்றிய பு:லொன்றில் * கொடையிற் பெரிய கோமான் ஒருவனைக் காட்டெனில் செட்டிநாட்டானைக் காட்டுவோம் என்பவை மின்வெட்டு அடிகள். அவர்தம் அருமந்த மைந்தர் முத்தைய வேள்,

செட்டிதகர் வேந்தர் அறிவுநீர்த்தேக்கத்தை எட்டி தகராமல் இயற்றினார் ஒட்டி அரசர் முத்தையா அதுகாப்பா ரானார் இருவிழியைக் காக்கிமை போல்’ என்ற பாடலில் காட்டப்பெறுகின்றார். இன்னொரு பாடலில் அண்ணாமலையரசர் ஆசையினை முத்தையாவின் தொண்டு எனும் தூண்டாவிளக்கு கண்ணாகக் கொண்டுநிறைவேற்றி வருகின்றதாகக் காட்டுவார். இவர்கள் இருவரும் கல்வித் தொண்டர்களாக இடம் பெறுகின்றனர். தேசத் தொண்டர்கள் வரிசையில் ஒமந்துரார், காமராசர் போன்றோரும் அறிஞர்கள் வரிசையில் சர்.ஏ. இராமசாமி, டாக்டர் அம்பேத்கார் ஆகியோரும்; திராவிட இயக்கத் தொண்டர்கள் வரிசையில் ப. சிவாநந்தம், பட்டுக்கோட்டை தளபதி அழகிரி, புதுக்கோட்டை வல்லத்தரசு, சர். ஏ. பன்னீர் செல்வம் போன்றோரும்; புலவர்கள் வரிசையில் செகவீர பாண்டியனார், விபுலானந்த அடிகள், வெள்ளை வாரணனார், அவ்வை துரைசாமி போன்றோரும்; வெளியீட்டாளர்கள் வரிசையில் வ. சுப்பையாபிள்ளை (கழகம்), பாரி செல்லப்பன் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.”

(எ) கட்சி அரசியல்: கவிஞர் ஏனோ கட்சி அரசியலை விரும்ப வில்லை. ஆசிரியத்தொழில், வக்கீல் தொழில் போல, அரசியலை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொண்டவர்களை அடியோடு வெறுப்பதைப் பாடல்கள் காட்டுகின்றன. உழைக்கும் மக்களே ஆட்சிக்குரியவர்கள் என்றும், அவர்களே தேர்தலில் நிற்க உரியவர்கள் என்றும் கூறுவார்.

92. புகழ் மலர்கள் - பக்கம் 19, 24 93. பாவேந்தர் பாரதிதாசன் - ஒரு கண்ணோட்டம்- பக்கம் 90-113