பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் 47

அரசியலை யேதொழில் ஆக்கிக் கொண்டவர் சுரண்டல் பேர்வழிகள் நாட்டின் துரோகிகள்

என்று கொதித்துப் பேசுவார். மேலும்,

கண்ட இடமெங்கும் செத்த கொள்கைகள் உண்டு கொழுக்க ஊரை ஏய்க்க எத்தனைக் கட்சிகள் எத்தனைக் கொள்கைகள் அத்தனையும் இந்நாட்டுக் குழைத்திடும் எண்னம் அணுவள விருப்பினும் அனைவரும் ஒன்றாக இணைவது தானே இயல்பு, சிறப்பு: வேற்றுமை எந்த உருவில் விளையினும் வேற்றுமை தானே ஒற்றுமை ஏது? தேர்தலில் நிற்கும் தில்லு முல்லுக் காரர் அனைவரும் காசு பதவி அகிகாரத்திற்கே ஆலாய்ப் பறப்பவர்; குதிக்கும்.இக் கொண்டான் மார்களை நாட்டில் தேர்ந்தெடுத்தனுப்புதல் திருடரை தேர்ந்தெடுத்தனுப்பும் தீமை ஆகுமே!’

என்று சாடவும் செய்கின்றார். வாக்காளர்கள் எண்ணிப் பார்த்து வாக்களிப்பார்களானால் எந்தக் கட்சியும் ஆட்சியை அமைக்க முடியாது. செய்வார்களா ? இன்று ஆளும் கட்சித்தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் “கையூட்டு வழக்குகளில் சிக்கிக் கொண்டதைப் பார்க்கும்போது மீக்களுக்கு அரசுமீது நம்பிக்கை குறைந்து வருகின்றது. பதவியிலிருப்பேர்ர் தம் தொண்டை மறந்து தம் பை நிரப்புவதில் கவனம் செலுத்துவதை மக்கள் கண்டு கொண்டார்கள். நீதி மன்றத்தின் தலையீட்டால்தான் “கையூட்டு அரசியல்” வெளியாயிற்று. விரைவில் தண்டனை தந்து இவர்களை அரசியலுக்கு வாராமல் நிரந்தரத் தடைபோட வேண்டும்.

(ஏ) சிறார்கட்கு. இவர்கட்காக ஏராளமான பாடல்கள் பல்வேறு கருத்துகளைப் பாடுபொருளாகத் தாங்குகின்றன. அவை யாவும்

94. நாள் மலர்கள் - பக்கம் 117