பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைத் திறன் - 55 ஒள்ளிய மணிச்சி ரிப்பும்

உவப்பூட்டும் பெண்குழந்தை.

(ஒள்ளிய - ஒளியுடைய) அன்னையி னிடத்தி னின்று -

வேடப்பன் அருமைச் செல்வி தன்னைத்தன் கையால் வாங்கித்

தமிழ்ப்பெரி யார்பால் தந்தான். “என் அன்பே இளம்பி ராட்டி”

எனவாங்கி அனைத்து மற்றும் முன்னுள்ளார் தமக்கும் காட்டி

முறைப்பட மொழிய லுற்றார்.

“வானின்ற மண்ணில் வந்து

மக்களைக் காக்கும் அஃது தேன்.அன்று கரும்பும் அன்று;

செந்நெல்லின் சோறும் அன்று; ஆன்அருள் வாலும் அன்றே;

அதன்பெயர் அமிழ்தாம்” தொன்மை ஆனபே ருலகைக் காக்க

அமிழ்வதால் மழை.அஃதேயாம்.

தமிழரின் தமிழ்க்கு ழந்தை

தமிழ்ப்பெயர் பெறுதல் வேண்டும்; அமையுறும் மழைபோல் நன்மை

ஆக்கும்.இக் குழந்தைக் கிந்நாள் அமிழ்தென்று பெயர்அமைப்போம் அமிர்தம்மை நாளும் வாழ்க’ என்றனர் அறிவில் மூத்தார்.

“அமிர்தம்மை வாழ்க’ என்றே

அனைவரும் வாழ்த்தினார்கள்

இதில் படைப்புக் கற்பனை அமைந்திருப்பதைக் காணலாம்.

5. குடும்ப விளக்கு- மக்கட்பேறு, பக்கம் 152-154