பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைத்திறன் Y 61

கற்பனை தன்வயமாக்குவதில் செயற்படுவதேயன்றி, கண்ட பொருளின் தன்மையை நோக்கிப் கோவைப்படுத்துவதன்று. அது மன உறுதியினின்றும் (will) வேறுபட்டது. காரணம், மனவுறுதி கடிவாளம் தாங்கி அத்தேரினை இவர்ந்து செல்லும் தேர் ஒட்டியேயன்றி, கற்பனைபோல் அத்தேரில் அமர்ந்து செல்லும் தலைவன் அன்று.இவை ஒவ்வொன்றினின்றும் கற்பனை வேறுபடினும், அவற்றையும் கற்பனை அனைத்துக் கொள்ளுகின்றது. ஏனெனில், கற்பனை செயற்படுவதற்கு முழுமனமும் செயற்பட்டாக வேண்டும். அழகினால்தான் உலகம் வளர்கின்றது; அழகானவற்றைப் படைத்தலே கற்பனையின் கடமையாகும்”. கற்பனை குழந்தைப் பருவத்தில் இயல்பாகவே அமைந்தது. சிறுவயதில் குழந்தை கற்பனை செய்வதைப்போலவே கவிஞனும் கற்பனை செய்கின்றான்; பாக்களைப் படைக்கின்றான். கற்பனையூற்று நம்மிடம் என்றும் சுரந்து கொண்டிருந்தால்தான் கவிதைகளை நன்கு சுவைக்கலாம்; நுகரலாம். கற்பனையால்தான்,

“இருந்தமிழே உன்னால்

இருந்தேன்; இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும்

வேண்டேன்” என்று சொல்லித் திளைக்கும் அளவுக்குக் கவிதைச் சுவை நம்மிடம் வளரும்”

“கன்னற்

பொருள்தரும் தமிழே நீஓர்

பூக்காடு; நானோர் தும்பி” என்று கூறும் பாவேந்தர் தமிழில் திளைத்துக் கொண்டிருந்ததால் தான் தமிழ் இலக்கியக் களஞ்சியத்தில் ஒரு கணிசமான அளவுக்குக் கவிதைச் செல்வத்தை நமக்காக விட்டுச் சென்றுள்ளார்.

13. தமிழ்விடுதூது கண்ணி- 151 14. கவிதை அநுபவம் (கழகம்) - பக்கம் 160-161 15. அழகின் சிரிப்பு பக்கம் 69