பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பாவேந்தரின் பாட்டுத்திறன் இயல் - 4

சொல்வளம்

சீதையின் அழகை வருணிக்கப் புகுந்த கம்பநாடன் பொன்னின் சோதி, போதின் நாற்றம். தேனின் தீஞ்சுவை என்று ஒவ்வொன்றாகச் சொல்லிப் பார்த்து இறுதியில் செஞ்சொற்கவியின்பம்” என்று சொல்லி மனநிறைவு கொள்ளுகின்றான். செஞ்சொற்களால் அமைந்த கவிதையே இன்பத்தைத் தரும். ஒலிநயம் அமைந்த சொற்களின் கட்டுக்கோப்பே கவிதையாகும் என்பர் ஜான்சன்’ என்ற திறனாய்வாளர். உள்ளத்திலுள்ளவற்றை உணர்ச்சி பொங்கத் தெள்ளத் தெளிந்த சொற்களில் எடுத்துரைப்பதுதான் கவிதை என்று உரைப்பர் கவிமணி, எனவே, கவிதைப் படைப்புக்கு செஞ்சொற்களே இன்றியமையாதவை என்பதை அறிகின்றோம்.

உரைநடையில் ஆளப்பெறும் சொற்களுக்கும் கவிதையில் கையாளப்பெறும் சொற்களுக்கும் வேற்றுமை இல்லை. கவிஞன் அச்சொற்களைக் கையாளும் முறையில்தான் இவ்வேற்றுமை உள்ளது. ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய நேரான பொருளைத் தவிர, வழிவழியாக அச்சொற்கள் ஆளப்படும் இடங்களின் தொடர்பால் அவற்றுடன் சேர்ந்தமைந்த கருத்துக்களும் உள்ளன. அன்றியும், சொற்கள் தமக்கென்றமைந்த ஒலித்தன்மையும், வல்லின, மெல்லின எழுத்துக்களுக்கேற்ப உணர்ச்சியுடன் சேர்ந்து ஒலிக்கும் தன்மையும் பெற்றுள்ளன. எனவே, கவிதைகளில் சொற்கள் அமையும்பொழுது இடத்திற்கேற்றவாறும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும் உணர்ச்சிக் கேற்றவாறும், கவைக்கேற்றவாறும் அவை அமைந்து கவிதையைப் பொலிவுடையவனாக ஆக்குகின்றன. இச்சொற்களை மேற் கூறியவாறு கையாளுவது கவிஞனின் திறனைப் பொறுத்தது; அவனது மேதைத் தன்மையையும் பொறுத்தது. கம்பன் போன்ற கவிஞர்கள் சொற்களைக் கையாளும் முறைக்கும் சாதாரணக்

1. பால. திதிலை செய் - 23 2. மலரும் மாலையும். கவிதை - 7.