பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வளம் 63

கவிஞர்கள் அவற்றைக் கையாளும் முறைக்கும் சிறந்த வேறுபாடுகள் உண்டு.அவர்கள் இயற்றியகவிதைகளைப் படிக்கும்போதேஇவ்வேறுபாடு புலனாகும். பல்வேறு கவிதைகளைப் படித்துச் சுவைப்பவர்களே கவிஞர்களின் சொல்வளத்தை (Diction) நன்கு அறிதல் இயலும்.

“சொல்வளம்” எனக் குறிப்பிட்டவுடன் நிகண்டுகள் அல்லது அகர முதலிகளிலுள்ள சொற்களையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டு அவற்றைக் கவிஞன் தன் கவிதைகளில் ஆளுதல் என்று கருதுதல் தவறு.இடத்திற்கேற்பச் செய்யுளின் நடைக்கேற்பச் சொற்கள் யாதொரு தட்டுத் தடையுமின்றி விரைந்து வந்து உதவும் நிலையே சொல்வளம் என்பது. இலக்கிய வழக்கிலும், உலக வழக்கிலும் உள்ள எல்லாச் சொற்களுக்கும் உயிர் உண்டு; வாழ்க்கை உண்டு; வாழ்க்கை வரலாறும் உண்டு. பண்டைய இலக்கியங்களில் நிரம்பப் பயிற்சியும் தன் காலத்து வழங்கும் மொழிபற்றிய மிக ஆழ்ந்த அநுபவமும் தன் ஆன்மாவுடன் ஒன்றிக் கலந்துவிட்ட தமிழுணர்ச்சியும் இருக்கும் கவிஞனுக்குத்தான் சொற்களின் உயிர்த் தத்துவம் நன்கு புலப்படும். இத்தகைய கவிஞனிடம்தான் அவன் நினைத்தவுடன் வேண்டும்பொழுது சொற்கள் அவனது மனக்கண் முன் தோன்றித் தம்மைத் தாமே அளித்து ஏவல் கேட்டு நிற்கும்.

சொற்களின் கலப்பு: சொற்களின் ஆட்சியால் மட்டிலும் சொல்வளம்நிரம்பி விடுவதில்லை. சொற்கள் ஒன்றோடொன்று காதல் மணம் புரிந்து கலந்து வாழும் காட்சியும் இச்சொல்வளத்தில் அடங்கும். “கிட்டரிய காதல் கிழத்தி இடும் வேலை, விட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப் பாயாதோ ?”, “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால், மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம்” என்பவற்றைக் காண்க. இன்னும் “செத்து மடிவதிலும்”, “சேர்ந்து பிறப்பதிலும்”, “தேன்சுரக்கப் பேசி இந்து தேசத்தைத் தின்னுதற்கு”, “பச்சைப் பசுந்தமிழ்”, “கட்டிக்கரும்பு”, “கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல்’-இவை சஞ்சீவி பர்வதத்தில் கண்டவை. “தேனிதழாள்”, “பானல்விழி மங்கை”,"இருட்காட்டை அழித்த நிலா”, “கன்னற்றமிழ்க் கவிவாணர்”, “சித்திரித்த ஆணழகு”, “கண்ணாடிக் கன்னம்”, “காதல் நெருப்பு”, “பாளைச் சிரிப்பு”, “வேல்விழி”,