பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வளம் Y 65

மானைப்போன்றாள்.எனக்குத் தானோ அன்றி

வறிதேநான் சாகத்தான் பிறந்துள்ளேனோ’

இடுகாட்டில் வேலன் அலறிப் பேசும் பல பாடல்கள். அவற்றுள் ஒன்று:

சிவப்பாம்பல் மலர்வாயிற் சிந்தும் முல்லைச்

சிரிப்புக்கும் கருப்பஞ்சாற் றுச்சொல் லுக்கும்

குவிக்கின்ற காதல்ஒளி விழிக்கும் கார்போல்

கூந்தலுக்கும் சாந்தமுகத் திங்க ளுக்கும்

உவப்புற்றேன் அவ்வுவப்பால் காதல் பெற்றே

உயிர்நீயே என்றுணர்ந்தேன் இயங்க லானேன்!

அவிந்தனைய திருவிளக்கே இந்த வையம்

அவியவில்லை எனில்எனக்கங் கென்ன வேலை?

இடுகாட்டில் பிணத்தின் அழகற்ற நிலை கண்டு, பெண்ணுலகை வெறுத்துரைக்கும் பாடல்கள் பல. அவற்றுள் இரண்டு:

பேன்நாறி வீழ்குழலைத் தேனா றென்றும்

பீளைஒழு கும்விழியை நீல மென்றும் மேல்நாறும் சளிமூக்கை எட்பூ என்றும்

வெறுங்குறும்பிக் காதைவழில் வள்ளை என்றும் ஊன்தாறும் ஊத்தைப்பல் வாய்உ தட்டை

ஒளிமுல்லை செவ்வாம்பல் கோவை என்றும் தோல்தாறும் கன்னம்கண் ணாடி என்றும்

துயர்ஈளை பயில்குரலைக் குயில்தான் என்றும்

உடல்சுமக்கும் உரல்போலும் இடையை, வானின்

உச்சிஅதிர் மின்னலிலும் அச்ச மென்றும்

கொடுங்குள்ள வாத்துநடை அன்ன மென்றும்

குறுகியசெக் குலக்கைக்கால் வாழை என்றும்

இடும்பையிலே இடும்.குதிக்கால் சுவடி என்றும் ஈர்த்த வெள்ளடித்தாமரைப்பூ என்றும்

4. பாண்டியன் பரிசு - இயல் 76 5. பாண்டியன் பரிசு - இயல் 85.