பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாவேந்தரின் பாட்டுத்தின் பிசைமுக கனியின் சாறே விகவும் பெரியதோர் ஆறாய் அண்டை யி லேஓடும் போது நான் அன்னி அருத்தமுடியாது” என்ற பாடலிலும்,

மதிபோன்ற தின்முகத்தின் சிரிப்பு - எனை மதிமயக்கும் அன்பின் வலைவிரிப்பு!” வான்ஒன்று நிலவொன்று

இணைந்ததனால் அழகுண்டு தானொன்று நீஒன்று

தணுகுவதால் வாழ்வுண்டு”

உயிருக்குத் தங்கக் கட்டி அவன்

உயிருக்குநீ வெல்லக் கட்டி’ என்ற பாடற் பகுதிகளிலும் இத்தகைய சொற்களைக் கண்டு

தெளியலாம் மகிழலாம்.

உதாரன் சனங்களிடம் முழக்கம் செய்ததில் (புரட்சிக் கவி) உணர்ச்சி மிக்க ஆவேச மொழிகளையும் அவனே அமுதவல்லியிடம் பேசின பேச்சில் கொஞ்சும் குழைவு மொழிகளையும் கண்டு மகிழலாம். சொற்களின் ஒலியால் பெறும் பொருள் ஒரு சொல்லில் கற்பனையாற்றல் காணப்பெறினும், அல்லது அஃது ஒரு நிகழ்ச்சி அல்லது படத்தை அப்படியே நினைவிற்குக் கொண்டுவரினும் அச்சொல் தோன்றும் இடத்தில் கவிதையும் பளிச்சிட்டுக் காட்டும். இத்தகைய சொல் தன்னுடைய ஓசைத்தன்மை, பொருள் விரிக்கும் தன்மை ஆகிய இரண்டால் தன் செயலை ஆற்றுகின்றது. ஒரு சொல்லுக்குள்ள இவ்விரண்டு தன்மைகளும் கவிதையில்தான் தெளிவாக விளங்கும். இந்த இரண்டு தன்மைகளை மொழியியலார்

18. காதல் பாடல்கள் - பக்கம் 43 19. காதல் பாடல்கள் - பக்கம் 52 23. காதல் பாடல்கள் - பக்கம் 53 21. காதல் பாடல்கள் - பக்கம் 64