பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வனம் N 71

முறையே ஒசையாற்றல் (Phonetic power) என்றும், பொருளாற்றல் (Semantic power) என்றும் கூறுவர். ஒசையளவிலும் சொல் பெரிய செயலைப் புரிகின்றது. கவிதை எந்த உணர்ச்சிக்கு நிலைக்களனாக உள்ளதோ அஃது அந்த உணர்ச்சிக்கேற்றவாறு அமைந்திருக்கும். கவிதையும் அதன் பொருளும் விளங்காவிடினும் அது தக்க ஒசையுடன் படிக்கப்பெற்றால், அஃது இன்ன உணர்ச்சியைக் கொண்டு எழுந்தது என்று கூறிவிடலாம்; கூறிவிட முடியும். இவ்வுண்மையைப் பழந்தமிழர் நன்கு அறிந்திருந்தனர் என்பதைப் பேராசிரியர் பாவுக்குக் கூறிய இலக்கணத்தால் அறியலாம். அவர் கூறுவார். “பாவென்பது, சேட்புலத்து இருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஒதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற் கேதுவாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை’ என்பது.

ஆள நினைப்பவர் யாருக்குமே - நாம் ஆட்பட்டிருந் தழிந்தநிலை தாள முடியாத போர்களினால் - பிற சமய மதங்களின் வேர்களினால் நீளத் துயின்றனம் பாழ்.அடிமை - தமை நிமிரா தழித்தது ஆரியமே, மீளப் பெரியார் பெருந்தொண்டு - இடி மின்னலாய்ப் பாய்ந்தது கட்ட்றுத்தோம்

முத்தமிழ்க் குருதியில் சேர்ந்திருந்த - பல மூடத்தனத்தின் நஞ்செடுத்தார் புத்தம் புதிய தமிழ்க்குருதி - நம் பொன்னுடல் புத்துணர்வு புத்துணர்ச்சி எத்திசையும்பெற ஏற்றிவிட்டார் - இனி எங்குண்டு நம்மை எதிர்ப்பவர்கள்? செத்தனர் செத்தனர் நமைமிதித்தோர் - இனிச் சீறும் புலிகள்நாம் வெல்பவர் யார்?’

22. தொல். பொருள். செய்யு. நூறு. 1 இன் உரை

23. வேங்கையே எழுக! - பக்கம்103