பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வளம் Y 75

குன்றத்துக் கொம்புத்தேன் முல்லைவாழைப்பழத்தேன் மன்றத்து மாப்புலவர் செந்தமிழ்த்தேன், என்ற முத்தேன் உண்டாலேதேன்.இம்மணிமேகலை ஒருத்தி கண்டாலே தித்திக்கும் தேன்” குறிஞ்சி நிலத்திலிருந்து கிடைக்கும் கொம்புத்தேன், மருதம் (முல்லை) நிலத்திலிருந்து கிடைக்கும் வாழையின் தேன், சங்கப்புலவரின் செந்தமிழ்த் தேன் - இவை வாயிலிட்டு நுகர்ந்தால்தான் இனிக்கும்; ஆனால், மணிமேகலை என்னும் அழகியோ கண்டாலே இனிப்பவள். தேன் - தேன் வாழை, பிறிதொரு பாடலில்,

கட்டடிக்கும் ஆளும் தோளும் பட்டாளந் தானோ? - அவர் காதலிமார் ஆசையோடு தொட்டாலும் தேனோ?” என்று “தொட்டாலும் தேன் இனிக்குமா?’ என்கின்றார்.

ஒரு பால்காரனின் அன்பு “பால்” என்ற சொல்லிலும் காட்டப் பெறுகின்றது.

கண்ணன்பால் மிகஅன்பால்

வேலைக் காரி கையிற்பால் செம்போடு தெருவிற் சென்றாள்; திண்ணன்,பால் வாங்கென்றான்.

கரியனும்பால், தீங்கற்ற பாலேளன்

பால்வாங் கென்றான் திண்னன்பால் கரியன்பால் வெறுப்பால் பெண் பால் “சீ” என்பால் நில்லாதீர்

போவீர் அப்பால்,

28. மணிமேகலை வெண்பா - 41 29. காதல் பாடல்கள்- பக்கம் 137