பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாவேந்தரின்பாட்டுத்திறன் கண்ணன் பால் நான்கொண்ட களிப்பால் அன்னோன் கலப்பாலே இனிப்பதென்று கசப்பால் சொன்னாள்.” இதில் பால்” என்ற சொல் அடிதோறும் நடனமாடி ஒர் ஆடலணங்கு வண்ண ஒளியில் தென்படுவதுபோல் பல்வேறு பொருள்களைத் தந்து படிப்போரை மகிழ்விக்கின்றது.

இன்னும், கவிஞர் காதலன் ஒருவன் பேச்சாக,

“பாடல் அவன் நான் நல்லுரை” “வளவவல் நான்; அவள் சம்பாநடவு” “விழியினால் எழுதினாள் ஒப்பந்தம் வெண்ணகையால் இட்டாள் கையெழுத்தும்” என்று கூறுவார்; காதலி ஒருத்தியின் பேச்சாகவும்,

மழையும் பயிரும் அவனும் நானும்’ என்று கூறுவார்.

வான்ஒன்று நிலவொன்று

இணைந்ததனால் அழகுண்டு தானொன்று நீஒன்று

தணுகுவதால் வாழ்வுண்டு’ என்றும்,

நானுனக்கும் நீளனக்கும் நாமளித்த அன்பளிப்பு’

என்றும் பொதுவாகவும் கூறுவார்.

30. காதல் பாடல்கள் பக்கம் 145 31. காதல் பாடல்கள் பக்கம் 29 32. காதல் பாடல்கள் - பக்கம் 34 33. காதல் பாடல்கள் பக்கம் 34 34. காதல் பாடல்கள் - பக்கம் 51 35. காதல் பாடல்கள் - பக்கம் 53 36. காதல் பாடல்கள் - பக்கம் 53