பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வளம் w 77

இங்கு சாதாரணச் சொற்கள்கூட கவிதையில் இடம் பெறுங்கால் ஒரு தனிப்பட்ட மதிப்பினைப் பெற்று விடுகின்றன. இம்மதிப்புடைய சொற்கள் உள்ளவைதாம் கவிதைகள் (Poetry); அம்மதிப்பு இல்லாதவை செய்யுட்கள் (Verses). இந்த மதிப்பைத் திறனாய்வாளர்கள் “கவிதை மதிப்பு” (Poetic value) என்று குறிப்பிடுவர்.

இங்ஙனம் பாவேந்தர் ஏற்ற சொற்களை ஏற்ற இடத்திலும், உணர்ச்சிகட்குத் தக்க சொற்களைத் தேர்ந்தெடுத்தும் கவிதையில் கையாளுவதால் அவர்தம் கவிதைகள் பொருட் சிறப்புடன் பொலிவு பெறுகின்றன. இங்ஙனம் கையாளும் முறையே சொல்வளம் அல்லது சொல்லாட்சி என்பது. சில இடங்களில் சொல்லாட்சியில் அழகு விளங்கும் சில இடங்களில் உணர்ச்சி துள்ளும். இயல்பாக அமையும் சொல்வளமே கவிதையைப் பல்லாற்றாலும் உயர்வடையச் செய்கின்றது.