பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - பாவேந்தரின் பாட்டுத்திறன் இயல் - 5

யாப்பு நெறி

கவிதைகளுக்கு ஒருவித வேகம் தந்து செழிக்க வைப்பது கவிஞனின் வேலை. ஒலிகள் அளவாலும், தன்மையாலும், முயற்சியாலும் வேறுபட்டு ஒழுங்காக அமைந்து, வந்த அமைப்பே திரும்பத் திரும்ப வந்து செவிக்கு இன்பம் பயப்பதை ஒலிநயம் (Rhythm) என்பர். இந்த ஒலி நயம் செயற்கை முறையன்று; அது தேவையின் பொருட்டு இயல்பாக வளர்ந்த ஒரு முறையாகும். கவிதையில் பயிலும் இந்த ஒலிநயத்தை வளர்த்து வாய்பாடுகளாக்கி ஒரு வகைச் செயற்கை அமைப்பைத் தந்தனர் நம் முன்னோர். இந்த வாய்ப்பாடுகள் அமையும் முறையையே“யாப்பு” என்றும் பெயரிட்டனர். வரையறுக்கப்பட்ட ஒலிநயமே யாப்பாகும். கவிதையில் சொற்கள் யாப்பு முறைப்படி ஒருவித வரிசையில் அமையுங்கால் அவை ஒன்றோடொன்று இணங்கி புதிய முறையில் செல்வாக்குப் பெற்றுத் தாம் இருக்கும் இடத்தையொட்டிப் புதுவேகத்தையும், புதுப்பொருள்களையும் பெறுகின்றன. இந்த யாப்பு முறைகளில் அமைந்த பாடல்களே"வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா” முதலிய பெயர்களைப் பெறுகின்றன. இடைக்காலத்தில் தாழிசை, துறை விருத்தம் என்ற பாவினங்கள் தோன்றி பாக்களில் ஏறி புதியவகைப் பாடல்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தன. பிற்காலத்தில் பல புதிய வகைப் பாடல்களும் தோன்றின.

யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது’

என்ற நூற்பா அடியின் இலக்கணத்தினால் பேராசிரியர் என்ற உரையாசிரியர் பாவினங்களை அமைத்துள்ளார், இந்த அடியின் புறனடையாக அமைந்தவையே “சிந்து, கும்மி” முதலிய பிற்காலப் {issi_{o}tt.

1. தொல் பொருள். செய். 149