பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பாவேந்தரின்பாட்டுத்திறன்

வையத் திறலுக்கென் அண்ணன் மகளை மணம்

செய்துவைத்தல் நல்லதெனச் செப்பினாள் -

துய்யதென்று

மன்னன் உரைத்தான்; மகளை வரவழைக்கச்

சொன்னான்; தொடர்ந்தாள்.அம் மாது’

பாவேந்தர் நூல்களில் காணப்பெறும் பஃறொடை வெண்பா என்ற யாப்புக் குறிப்புகள் பாவேந்தரால் குறிக்கப் பெற்றனவா? பிறரால் குறிக்கப் பெற்றனவா? என்பது அறியக் கூடவில்லை. ஒரே அமைப்புடைய பாடலுக்குச் சில இடங்களில் பஃறொடை வெண்பா என்ற குறிப்பும்,சில இடங்களில் கலிவெண்பா என்ற குறிப்பும் உள்ளன. எனவே, இப்பாவகைகள் குறித்து இலக்கண நூல்கள் நுவலும் விளக்கங்களை ஈண்டு நினைவுகூர்தல் தகும்.

பஃறொடை வெண்பாவின் பேரெல்லை ‘ஏழடி என்றும், பன்னிரண்டடி என்றும் அடிகள் அளவில்லை என்றும் மூன்று கருத்துக்கள் நம் முன்னோர்களிடம் உண்டு” ஏழடியும், பன்னிரண்டு அடியும் கொள்வோர் அவற்றினும் மிகுந்து வரும் பாடல்களைக் “கலிவெண்பா’ என்பர். பெருமைக்கு அளவில்லை என்போர் பஃறொடை வெண்பாவுக்கு வேறுபாடு காட்டவேண்டியுள்ளது. ஒரு பொருள்பற்றி வருவது கலிவெண்பா என்றும் (எ.டு.: கந்தர் கலிவெண்பா அல்லாதது பஃறொடை வெண்பா என்றும் கொண்டனர். தனிச் சொல் பெறுவதும், பெறாததும் இவற்றிடையே வேறுபாடாக யாண்டும் கூறப்பெறவில்லை.

இக்கொள்கைகளின் அடிப்படையில் பாவேந்தர்தம் யாப்புக் குறிப்புகளை நோக்கினால் அவை எந்தவகைக் கோட்பாட்டிற்கும் பொருந்துமாறில்லை. பன்னிரண்டு அடிக்கு மேற்பட்ட அவர்தம் பாடல்களில் இரண்டடிக்கொருமுறை தனிச்சொல் பெற்று வருவனவற்றில் “கலிவெண்பா’ என்றும் குறிப்புகள் உள்ளன. தனிச்சொல் இன்றி வருவனவற்றில் பஃறொடை வெண்பா என்றும் குறிப்புகளைக் காண முடிகின்றது (கடல்மேற் குமிழிகள் - 25).

9. கடல்மேற் குமிழிகள் (20) - பக்கம் 50 10. பாவேந்தர் வழியா? பாரதி வழியா?-பக்கம் 9-10