பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் சி. தங்கமுத்து பாரதிதாசன் முன்னைத் துணைவேந்தர் பல்கலைக்கழகம் பல்கலைப்பேரூர், திருச்சிராப்பள்ளி-24 அணிந்துரை "சேலத்துக் கவிஞர் முருகு சுந்தரம் பாலத்துச் சோதிடம் பார்க்க மறுப்பவர்... இரும்பு தூங்கும் சேலத்தில் பிறந்தும் கரும்பு துங்கும் கவிதைகள் வடிப்பவர்" என்று உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் மதிப்பீடு செய்யப்பட்ட கவிஞர் முருகுசுந்தரம் ஆவார். இவர் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளில் புதிய வடிகால்களைத் தோற்றுவித்தவர். கவிஞர் முருகுசுந்தரத்தின் கவிதைகள் பல்நிலைப் பரிணாமங் களைப் பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாகப் "பாரதிதாசனைப் போல் எழுதுவதுதான் என் முதற்குறிக்கோள். சுரதாவின் புதிய உத்திகள் இளங்கவிஞனான என்னைப் பெரிதும் வசீகரித்ததுண்டு. இன்று நான் நானாக எழுதுகின்றேன்” என்று கவிஞர் முருகுசுந்தரம் எழுதுவது இங்குச் சுட்டிக்காட்டத்தக்கது. கவிஞர் முருகுசுந்தரம் அவர்களின் கவிதைகளில் கடைதிறப்பு, பனித்துளிகள், சந்தனப்பேழை, தீர்த்தக்கரையினிலே, எரி நட்சத்திரம், வெள்ளையானை ஆகியவை குறிப்பிடத்தக்கன. இவற்றுள் வெள்ளையானை என்பது வால்மீகியின் படைப்பான அகலிகையை உள்ளீடாக வைத்து எழுதப்பட்டதாகும். அகலிகை காலந்தோறும் படைப்பாளிகளுக்குப் புதுப்புது ஆக்கங்களைத் தந்து கொண்டிருக்கும் கதைப் படைப்பாகும். சது.சு. யோகியார் முதல் தமிழ்நாடன் வரை தமிழ்க் கவிஞர்கள் பலர் தங்களுடைய படைப்புகளின் கூர்மையை வெளிப்படுத்த இக்கதையை எடுத்தாண்டுள்ளார்கள். இளமையில் அகலிகையின்