பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நினைவில் நின்றவை முதலாகப் பாவேந்தர் படத்துறையில் நுழைந்தது 1938ஆம் ஆண்டு. சேலம் மோகினி பிக்சர்சார் குழலிசை மாமன்னர் திருவாவடுதுறை இராசரத்தினத்தைக் கதாநாயகனாகப் போட்டுக் கவி காளமேகம்' என்ற படத்தை எடுத்தனர். அதற்குத் திரைக்கதை, வசனம், பாடல் எல்லாமே பாவேந்தர் தாம் எழுதினார். ஏறக்குறைய இதே காலத்தில்தான் தம் நண்பர் வ.ரா.வின் 'இராமானு'சர்' என்ற படத்துக்குப் பாடல்கள் எழுதவும் ஒப்புக் கொண்டார். பாலாமணி அல்லது பக்காத் திருடன் என்ற படத்திற்கும் ஒரு பகுதி வசனம் எழுதினார். இத்துடன் இவர் படத்துறை வாழ்க்கையின் முதற்கட்டம் முற்றுப் பெற்றது. பிறகு கி.பி.1947 முதல் 1953 வரை ஆறு ஆண்டுகள் திரைப்படத் துறையில் பாவேந்தர் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தார். அபூர்வசிந்தாமணி, சுபத்ரா, சுலோசனா, பொன்முடி, வளையாபதி ஆகிய ஐந்து படங்களும் ஆண்டுக்கொன்றாகச் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் தொடர்ந்து வெளியிடப்பட்டன. இந்த நான்கிற்கும் பாவேந்தர் திரைக்கதை வசனம் எழுதினார்; சில பாடல்களும் எழுதினார். அதன்பிறகு திரைப்படத் துறையிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அவருடைய இசைப் பாடல்கள் அவ்வப்போது சில திரைப்படங்களில் எடுத்தாளப்பட்டன. பிறகு 1960ஆம் ஆண்டு திரைப்படத் துறை இவரை மீண்டும் பற்றிக் கொண்டது. புதுவையிலிருந்து இவர் வெளியிட்டுக் கொண்டிருந்த குயில் 13.12.60 இதழில் பாரதிதாசன் பிக்சர்ஸ், பற்றிய அறிவிப்பு வெளியாகியது. 20.12.60 இதழில் பாண்டியன் பரிசு திரைப்பட விளம்பரம் வெளியாகியது. பாவேந்தர் புதுவையிலிருந்து தம் குடியிருப்பை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். கி.பி. 1961-62ஆம் ஆண்டில் நான் மாணவனாகச் சென்னையில் இருந்தேன். பாவேந்தர் பால் எனது சென்னைத் தொடர்பு 1961ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்டது. பாவேந்தர் குடியிருந்த இராமன் தெரு பங்களாவை முதன்முதலாக நான் அடைந்தபோது என்னை வரவேற்றது 'பாரதிதாசன் பிக்சர்ஸ்’ என்ற பெரிய விளம்பரப் பலகைதான். நான் சென்னையில் அவரோடு பழகிய நாட்களில் படம் பிடிப்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். ஆனால் அம்முயற்சியைப் பற்றிய முழுமையான வரலாறு எனக்குத் தெரியாது. நான் அவரைச் சந்தித்தபோது தாம் மேற்கொண்டிருந்த படப்பிடிப்பு முயற்சியில் ஏமாற்றமும் சலிப்பும் கொண்டிருந்த பாவேந்தரைத் தான் பார்த்தேன். நான் அறிந்திருந்த குறைவான செய்திகளிலிருந்து, படம்