பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நினைவில் நின்றவை தேர்வு. எப்படியாவது ஏமாந்தவர்களை வளைத்துப் போட்டு ஆயிரம் அடியாவது படத்தைப் பிடித்துவிடவேண்டும். அதன்பிறகு அதைக் கடன் கொடுக்கும் சேட்டிடம் காட்டி அவன் பணத்தை வைத்து கொண்டு படத்தை முடிக்க வேண்டும். இதுதான் செப்பிடு வித்தை. இதைச் செய்வதற்குத் தமிழ்நாட்டுப் பாவேந்தர் தேவைப்படவில்லை. பாவேந்தருடைய கடவுட் கொள்கை பற்றி நானறிந்த ஒரிரு செய்திகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பாவேந்தர் இளமையில் முருகபக்தர். மயிலம் முருகன் மீது அவர் பாடிய சுப்பிரமணியர் துதியமுது அதற்குச் சான்று. பள்ளி மாணவராய் இருந்த நாட்களில் பாவேந்தர் பஜனைப் பாடலும் பாடியதுண்டு. இளமையிலே பாவேந்தர் உள்ளத்தில் ஊறிப் போயிருந்த இந்தச் சைவப்பற்று விட்டகுறை தொட்டகுறையாகப் பிற்கால்த்திலும் அவரிடம் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்ததாகச் சிலர் குறிப்பிடுவதுண்டு. அதனால் தான் தாம் எழுதிய எதிர்பாராத முத்தம் காப்பியத்தின் இரண்டாம் பகுதியில் சைவத்துக்கும் குமரகுருபரர்க்கும் வக்காலத்து வாங்கிப் பாடியிருக்கிறார் என்று கூறுவர். இன்னும் சிலர் பாவேந்தர் புரட்சிக்கவியில் பாடியுள்ள 'வாணி அமைத்திட்டாள் நற்கவிதை; மழை போல் பெய்தான் என்ற சொற்றொடரைக் காட்டி அவரையறியாமல் அவருள்ளத்தில் அரும்பிய கடவுட் பற்றைக் குறிப்பிட்டுக் காட்டுவர். 30.9.60 வெள்ளி மாலை 6 மணியளவில் புதுவை வாணி நிலையத்தில் நடைபெற்ற கலைமகள் விழாவுக்குப் பாவேந்தர் வந்து சிறப்பித்தார். என்ற ஒரு செய்தி 11.10.60இல் வெளியான குயில் ஏட்டில் வெளியாகியிருந்தது. ‘எங்கெங்குக் காணினும் என்று தொடங்குவது அவரது சக்திப்பாட்டு. பாவேந்தர் 1930இல் வெளியிட்ட கதர் இராட்டினப் பாட்டில் 'கண்ணன் வழிப் பிறந்த சாதி என்ற கண்ணன் பாராட்டு வரி தென்படுகிறது. பாவேந்தரின் நண்பரான ஒர் இசையாசிரியர் பலமுறை விரும்பிக் கேட்டதற்காகக் கண்ணன் கிளிக்கண்ணி (40 வரிகள்) ஒன்று பாடிக் கொடுத்திருக்கிறார். வாணி, சக்தி, கண்ணன் பற்றிய இப்பாடல்கள் யாவும் பாவேந்தர் பாட்டில் காணப்படும் பாரதி பாணியின் எதிரொலிகள்: திருவள்ளுவர் படத்தை எழுதிய ஓவியர் திரு.வேணுகோபால சர்மா பாவேந்தருக்கு நெருங்கிய நண்பர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது பாவேந்தரைப் பற்றி ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். சர்மா ஒரு பக்தர். பாவேந்தர்