பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் šetрамі 109 சென்னையிலிருந்து அரசாங்கப் பேருந்து வண்டியில் பகலெல்லாம் குலுங்கிப் பயணம் செய்து கொண்டு வரப் போவதாகப் பாவேந்தர் எழுதியிருந்த கடிதச் செய்தியைப் படித்ததும் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவ்வளவு நீண்ட தொலைவு பேருந்தில் பகல் நேரத்தில் பயணம் செய்வது அப்போதிருந்த அவர் உடல் நிலைக்கு ஏற்றதன்று என்று கருதினேன். எனவே இரவு நேரத்தில் படுக்கை வசதியோடு புகைவண்டியில் வரும்படி அவருக்கு வற்புறுத்தி ஒரு கடிதம் எழுதினேன். என்னுடைய கடிதத்தைக் கண்டதும் அவருக்குச் சுரீரென்று கோபம் வந்துவிட்டது போலும். அவரது விருப்பத்துக்கு மாறாகத்தான் யாரும் பேசக்கூடாதே! நான்கு நாட்கள் கழித்து மிகவும் சூடாகப் பாவேந்தரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது: - 5.*.63 அன்பு முருகுசுந்தரம்! நான் உனக்கு அஞ்சல் எழுதியுள்ளேன். அது கிடைத்திருக்கும். இப்போதும் சொல்லுகிறேன். நான் சென்னையில் சேலம் எக்ஸ்பிரஸில் காலை 7.15க்குப் புறப்பட்டு 8.11.83 மாலை 4.15 மணிக்குச் சேலம் வந்து சேருகிறேன். என் நண்பர் ஒருவரும் என்னுடன் வருவார் கூடுமானால் சந்திக்கவும். மற்றவை நேரில் -பாரதிதாசன் தாம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடியே 8.11.63 மாலை 4.15 மணிக்கு அரசாங்க விரைவு வண்டியில் சேலம் பேருந்து நிலை யத்தில் வந்து இறங்கினார். நானும் புலவர் மி.மு. சின்னாண்டாரும் வேறுசில நண்பர்களும் மாணவர் கூட்டத்தோடு மாலையும் கையுமாகக் காத்திருந்தோம். தக்கமுறையில் பாவேந்தரை வரவேற்று வசதியான ஒரு தங்கல்மனையில் கொண்டு போய்ச் சேர்த்தோம். நான் சென்னையில் இருந்தபோது ஒருமுறை சேலம் வரும்படி அவரை வேண்டிக் கொண்டேன். உடனே அவர் 'வரலாம்...' என்னை உன்னால் வைத்துச் சமாளிக்க முடியாது’ என்று சொன்னார். அவ்வாறு சொன்னது எனக்கு என்னவோ போல் இருந்தது. தன் விருப்பம் கடுமையாக மறுதலிக்கப்பட்டால் ஒரு குழந்தை தன் பெற்றோர் முகத்தை எவ்வாறு பார்க்குமோ அவ்வாறு அவர் முகத்தை நான் பார்த்தேன். பாவேந்தர் சேலம் வரும் செய்தி கடிதம் மூலம் என்னை வந்தடைந்ததும் அவர் சென்னையில் சொன்ன இச்சொற்கள் தாம் முதலில் என் நினைவுக்கு வந்தன. பாவேந்தரின் அன்றாட வாழ்க்கை முறையையும் உணவு முறையையும் நான் பலநாள் நேரில் கண்டறிந்தவன். சேலத்தில் இருக்கும் வரை அவர் மனங்கோணாமல் நடந்து கொள்ள வேண்டுமே என்ற அச்சம் எனக்கு வந்துவிட்டது. அவர் என்ன என்ன