பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் g e 11? திருவள்ளுவர் படத் திறப்பு விழா நடைபெற்றது. புலவர் குழந்தை திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்தார். மாநாட்டின் துவக்கவுரைப் பேச்சாளராக நாமக்கல் கவிஞரின் பெயர் போடப்பட்டிருந்தது. ஆனால் அவர் மாநாட்டுக்கு வரவில்லை. இம்மாநாட்டில் கரத்தைப் புலவர் ந.இராமநாதன், அரசினர் பயிற்சிக் கல்லூரியில் அப்போது பேராசிரியராக இருந்த கு.சிவமணி, ஈரோடு புலவர் தமிழன்பன், பழனி இளங்கம்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர். பாவேந்தர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் நானும் பங்கேற்றேன். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திரு.சி.பா. ஆதித்தனார் வள்ளுவர் கண்ட தமிழகம் அன்றும் இன்றும் என்றும், என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். மாநாட்டுக்குத் தலைமைதாங்கிய பாவேந்தர் உரை ஒரே உணர்ச்சிப் பிழம்பாகவும் ஆவேசமாகவும் இருந்தது. அந்த மாநாடு நடைபெறுவதற்குச் சற்று முன்தான் தீக்குறளை சென்றோதோம் என்ற திருப்பாவை அடிக்குக் காஞ்சி சங்கராச்சாரியார் புதிய உரை சொல்லித் தமிழறிஞர்களின் ஏகோபித்த கண்டனத்துக்கு ஆளாகியிருந்தார். பாவேந்தரின் ஆவேசத்துக்குச் சொல்ல வேண்டுமா! மாநாடு நடந்த இரண்டு நாட்களும், நாங்கள் பாவேந்தரோடு இராசிபுரம் அரசினர் பயணிர் விடுதியில் தங்கியிருந்தோம். பாவேந்தரும், புலவர் குழந்தையும், புலவர் இராமநாதனும் ஓயாமல் தமிழைப் பற்றிப் பேசியும் வாதிட்டுக் கொண்டும் இருந்தனர். எங்களுக்கெல்லாம் அவர்கள் பேச்சு சீரணிக்க முடியாத பெரிய விருந்தாக இருந்தது. பாவேந்தரும் புலவர் குழந்தையும் தமிழ்ப் புலவர் உலகில் முரட்டுத்தனத்துக்குப் பேர் போனவர்கள். இந்த இரண்டு பேருமே மதயானை போல் சில கருத்தில் மோதிக் கொள்வார்கள். நாங்கள் அச்சத்தோடும் வியப்போடும் அவர்களையே பார்த்துக் கொண்டிருப்போம். பாவேந்தர் கடைசியாக அது அப்படித்தா' என்று அடித்து முழங்குவார். புலவர் குழந்தை பேசாமல் இருந்துவிடுவார். பொதுவாக இதுபோன்ற இலக்கிய மாநாடுகளுக்கு வாழ்த்துச் செய்திகள் தாம் வருவது வழக்கம். 9.11.63 திங்கட்கிழமை முற்பகல் நாங்கள் மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்தபோது உயர் திருவாளர் புரட்சிப் பாவலர் பாரதிதாசன் அவர்கள், மே/பா 'கவிஞர் மாநில மாநாடு' என்று முகவரி போட்டு ஒர் அஞ்சல் உறை வந்தது. அதில் நான்கு முழுப்பக்க அளவில் ஓர் வசைக் கவிதை இருந்தது. அஞ்சல் உறையின் மறுபக்கத்தில் ம.இலெ. தங்கப்பா மே/பா தென்மொழி, திருப்பாதிரிப்புலியூர் கடலூர் பு.ந. என்று