பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 119 கொன்னுட்டீங்களே! என்று கதறிக் கொண்டிருந்தார். கவிஞர் பொன்னடி அருகிலிருந்து கோபதிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ்நாடு-புதுவை மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளும், கவிஞர்களும், புலவர்களும் பெருமாள் கோயில் தெருவெங்கும் நின்று கொண்டிருந்தனர். பாவேந்தரின் இறுதி ஊர்வலம் அவர் வீட்டிலிருந்து காலை பத்து மணிக்குத் துவங்கியது. மகாகவி பாரதி திருவல்லிக்கேணியில் இறந்தபோது அவரை அடக்கம் செய்வதற்காகப் புறப்பட்ட ஊர்வலத்தில் முப்பது பேர் தாம் கலந்து கொண்டதாக ஓர் அன்பர் செய்தித்தாளில் ஒருமுறை வருந்தி எழுதிக் கண்ணிர் வடித்திருந்தார். ஆனால் பாவேந்தரது இறுதிப் பயணத்தில் 10,000 பேர் கலந்து கொண்டார்கள். ஊர்வலம் ஒரு மைல்துாரம் இருந்தது. பாவேந்தரின் எழுத்துச் சாட்டைக்கு அடிக்கடி இலக்கான புதுவை முதலமைச்சர் குபேர் வழியில் பாவேந்தருக்கு மாலையிட்டு வணங்கினார். வேறு இரண்டு புதுவை அமைச்சர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் நடுப்பகல் 12 மணிக்கு மயானத்தை அடைந்தது. எந்தச் சடங்குகளும் இல்லாமல் பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்டார். பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்டபோது கவிஞர் பொன்னடியான் கையில் ஒரு பெரிய மாலையுடன் நின்று கொண்டிருந்தார். பாவேந்தர் சடலம் குழியில் இறக்கப்பட்டபோது மிகவும் கவனமாகக் கையிலிருந்த மாலையைப் புதைகுழியில் போட்டார். நான் அருகில் நெருங்கிக் கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தேன். "பாவேந்தரின் அன்புக்குரிய ஒர் அம்மையார் சென்னையில் இம்மாலையை என் கையில் கொடுத்து மறக்காமல் அவர் உடலோடு இதையும் சேர்த்துப் புதைக்குமாறு வேண்டிக் கொண்டார்” என்று கூறினார் பொன்னடி, பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்டதும் அம்மயானத்திலேயே ஒர் இரங்கற் கூட்டமும் நடைபெற்றது. யாரோ ஒர் புதுவைப் பிரமுகர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். திருவாளர்கள் ம.பொ.சி., ஈ.வி.கே. சம்பத், கவி கா.மு.ஷெரீஃப், இரா. நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, என்.வி. நடராசன், கண்ணதாசன், சுப்பையா (பொதுவுடைமைக் கட்சித் தலைவர்), குத்துசி குருசாமி ஆகியோர் பேசினர். அவ்வை திரு.டி.கே.சண்முகம் துன்பம் நேர்கையில், 'உலகப்பன் ஆகிய பாவேந்தர் பாடல்களைப் பாடினார். பாவேந்தரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய மயிலை லோகநாதன் என்ற தி.க.நண்பர் மாரடைப்பால் உயிர் துறந்தார்.