பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ៥វិញ கவிதைகளின் தோற்றம் கவிஞர்கள் தாம் எழுதும் கவிதைகளைத் தாமே சிந்தித்து கற்பனையாகவும் எழுதுவர்; தமது வாழ்க்கையிலும், தம்மைச் சார்ந்தோர் வாழ்க்கையிலும் ஏற்படும் எதிர்பாராத சில நிகழ்ச்சிகளின் உந்துதல்களாலும் உணர்ச்சி வசப்பட்டு எழுதுவர். இத்தகைய உந்துதல்கள் எல்லாக் கவிஞர்களின் வாழ்க்கையிலும் உண்டு. அரசியலிலும், சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்திலும், ஆசிரியர் பணியிலும் ஈடுபட்டிருந்த பாவேந்தர் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் கொள்வதற்கு அவர் வாழ்க்கையில் எத்தனையோ வாய்ப்புகள் இருந்திருக்கும். பிறர்மீது கொண்ட அன்பினாலும், உள்ள(மன) நெகிழ்ச்சியாலும் எத்தனையோ கவிதைகள் தோன்றி யிருக்கலாம். அவ்வாறு தோன்றிய சில கவிதைகள் உணர்ச்சிப் பிழம்புகளாய், உயிரோவியங்களாய் வடிவம் பெற்று இலக்கியத்தில் ஏறி மக்கள் நெஞ்சில் நிலைத்து நின்று விட்டன. அத்தகைய சில கவிதைகளையும், அக்கவிதைகளை எழுதத் தூண்டிய வரலாற்று நிகழ்ச்சிகளையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். திருமணம்: இப்பாடல் 1949ஆம்ஆண்டு எழுதப்பட்டது. பெரியாருக்கும் மணியம்மைக்கும் நடைபெற்ற திருமணம் இந்த நூற்றாண்டில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது என்பதைத் தமிழகம் அறியும். அத்திருமணத்தால் திராவிடர் கழகம் இரண்டாக உடைந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. சமுதாய சீர்திருத்த இயக்கமாக இருந்த திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக்