பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சில கவிதைகளின் தோற்றம் மாதிவள் இலை எனில் வாழ்தல் இலை எனும் காதல் நெஞ்சக் காந்தமும், நாணத் திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழை நெஞ்ச இரும்பும் நெருங்கும் மணம்பெறும்! இது உண்மையான திருமணத்துக்குப் பாவேந்தர் கொடுக்கும் விளக்கம். - புணர்ச்சி இன்பம் கருதாப் பூவையின் துணைப்பாடு கருதும் துயோன், திருமணச் சட்டத் தாற்பெறத் தக்க தீநிலை இருப்பினும் அதனை மேற்கொளல் இல்லை அஃது திருமணம் அல்ல ஆதலால் -பெரியார்-மணியம்மை திருமணம் உண்மையான திருமணம் ஆகாது என்பதற்கு இது பாவேந்தர் கொடுக்கும் விளக்கம். அரும்பு விரற்கிளி அலகு நகத்தால் நன்று சொறிவாள் என்று கருதி மணச்சட்டத்தால் மடக்க நினைப்பது திருந்திவரும் நாட்டுக்குத் தீய எடுத்துக்காட்டு மங்கையர் உலகின் மதிப்புக்குச் சாவுமணி இது அண்ணா-கைவல்யம் கருத்துப் போர். அதனைத் திராவிடர் உள்ளம் தீண்டவும் நானுமே! -இக்கடைசி வரி தந்தை பெரியார் மீது வீசிய எழுத்துச் சாட்டை இப்பாடலில் உள்ள கீழ்க்கண்ட அடிகள் இரண்டும் மிகவும் ஆற்றல் மிக்கவை. "மலம்மூ டத்தான் மலர்பறித் தேன். எனில் குளிர்மலர்ச் சோலை கோவென் றழாதோ?” 'கணவனின் தினவறிந்து சொறிந்து விடுவதற் காகத் தான் மனைவி என்ற கைவல்யத்தின் கருத்தை இதைவிட மோசமாக யாரும் விமர்சனம் செய்ய முடியாது. ஒரே குறை: இப்பாடல் 1944இல் எழுதப்பட்டது. இப்பாடலுக்கு உந்துதலாக பக்கம் 64: பாரதிதாசன் கவிதைகள் II