பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Boo-sou: +s o f23 இருந்தவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; பாவேந்தருக்கு அனபர், பாவேந்தரோடு நீண்ட நாள் பழகியவர். பாவேந்தர் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையவர். மிகவும் வசதியோடு வாழ்ந்த இப்பெரியவர், பாவேந்தருக்குப் பலவிதத்திலும் மணங்கோணாமல் உதவி புரிந்தவர். தமிழ்ப் புலமையும் இசைப்புலமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். பாவேந்தர் மிகவும் மதித்துப் போற்றிய நண்பர். இந்நண்பர் மிகவும் இளமையிலே தம் மனைவியை இழந்து விட்டார். மனைவியை இழந்தபோது இவருக்கு வயது இருபத்து மூன்று. மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்று உள்ளம் ஊசலாட இருந்த நிலையில் ஒரு பெண்ணிடம் பழகும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. அப்பெண் படித்தவர்; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் வேற்றுச்சாதி. சீர்திருத்த வாதியான இவர் சாதி வேறுபாட்டைக் கருதாமல் மணக்க முன் வந்தார். இருவரும் காதல் உணர்வோடு பழகியும், பெற்றோருக்கு அஞ்சி அப்பெண் இவரை மணந்து கொள்ள மறுத்துவிட்டார். தமது காதலில் ஏற்பட்ட தோல்வியை இந்நண்பர் பாவேந்தரிடம் ஒருநாள் கூறினார். அன்று இரவே இது கவிதையாக மலர்ந்து விட்டது. இப்பாடலில் காதல் விருப்பும், பெற்றோருக்கு அஞ்சும் அப்பெண்ணின் அச்சமும் மிக அழகாக விளக்கப்பட்டுள்ளன. திருவிருக்கும் அவளிடத்தில் திறமி ருக்கும்! செங்காந்தள் விரல்நுனியின் நகத்தி லெல்லாம் மெருகிருக்கும் இதழோரப் புன்சி ரிப்பில் விளக்கிருக்கும் நீள்சடையில் மலரி ருக்கும் புருவத்தில் ஒளியிருக்கும் வளைவி ருக்கும்! போய்ப்போய்நான் காத்திருக்கும் இடமும் மிக்க அருகிருக்கும் வரமாட்டாள்; உடையும் நெஞ்சுக் கணைகோலும் எண்ணந்தான் அவளுக் கில்லை." தமிழனுக்கு வீழ்ச்சியில்லை. இப்பாடல் எழுதப்பட்ட ஆண்டு 1955 என்று எண்ணுகிறேன். ஆசிரியர் சொக்கலிங்கம் தினசரி நாளிதழைச் சென்னையில் தொடங்கினார். அவ்விதழைத் தொடங்கியபோது அதில் வெளியிடுவதற்காகப் பாவேந்தரிடம் ஒரு கவிதை கேட்டார். பாவேந்தர் கொடுக்க மறுத்தார். அப்போது உடன் இருந்த கெழுதகை நண்பரான நாமக்கல் மு. செல்லப்பரெட்டியார் தூண்ட இக்கவிதையை எழுதித் தினசரிக்கு அனுப்பி வைத்தார். இதில் t பக்கம் 43 காதல் நினைவுகள்