பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 சில கவிதைகளின் தோற்றம் பெரியார் பணியும், திராவிட இயக்கத்தால் தமிழும் தமிழினமும் பெற்ற உயர்ச்சியும் சுட்டப்படுகின்றன. தாழ்வதில்லை. தமிழ்நாடு தமிழ் மக்கள். தமிழென்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே தமிழர்க்குத் தாண்டுசெயும் தமிழனுக்குத் தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்! தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ? இரவின் இளவரசி, பாவேந்தர் சென்னை இராமன் தெருவில் குடியிருந்தபோது 16.2.62 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் இந்தப் பாடல் எழுதப் பட்டது. சிறுசிறு கருத்துக்களைக் கருவாகக் கொண்ட கட்டளைக் கலித் துறைகளை எளிமையாக எழுதி, அப்பாவினத்தைக் கவிஞர் நடுவே விளம்பரப்படுத்தப் போவதாகப் பாவேந்தர் குறிப்பிட்டதை நான் 14.2.62 நாட்குறிப்பில் எழுதியிருக்கிறேன். அவ்வாறு அவர் குறிப்பிட்ட பிறகு முதன்முதலாக எழுதி விளம்பரப்படுத்திய கட்டளைக் கலித்துறை இதுதான். பாவேந்தர் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு முற்றத்தில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார். நானும் பொன்னடியும் கூடத்தில் அமர்ந்திருந்தோம். வெளியில் அமர்ந்திருந்த பாவேந்தர் திடீரென்று உள்ளே எழுந்து வந்தார். "என்ன இது மயக்கும் மணம்? எங்கிருந்து வருது? என்ன பூ?” என்று மூக்கில் மணத்தை இழுத்துக் கொண்டே கேட்டார். நாங்களும் அடிக்கடி மணத்தை உணர்ந்தோம். "அது என்ன மலர் என்று பார்த்துவிட்டு வருகிறோமய்யா" என்று கூறிவிட்டு நானும் பொன்னடியும் வெளியில் சென்றோம். பாவேந்தர் வாடகைக்கு இருந்த பங்களாவுக்கு அடுத்த பங்களா, ஒட்டல் அதிபர் புகாரி சாகிபின் குடியிருப்பு. இரண்டு பங்களாவுக்கும் இடையில் கைப்பிடிச் சுவர் எழுப்பப்படவில்லை; வேலிதான் இருந்தது. அந்த வேலியில் நைட்குவீன் στοδήμο εί, கொத்துக் கொத்தாக மலர்ந்து அவ்வாறு மயக்கும் மணத்தைப் பரவ t பக்கம் 103 பாரதிதாசன் கவிதைகள் II