பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 125 விட்டுக் கொண்டிருந்தது. ஒரு பெரிய மலர்க்கொத்தாக ஒடித்துக் கொண்டு வந்து பாவேந்தர் கையில் கொடுத்தோம். அதைப் பார்த்ததும் 'இந்தப் பூத்தானா? அடேயப்பா! என்ன மணம்..” என்று வியந்து விட்டு "ஆமா. இப் பூவோட பேரென்ன சொன்னிங்க?" என்று கேட்டார். நைட்குவீன் என்று நாங்கள் மீண்டும் சொன்னோம். அப்படியா!' என்று கூறிவிட்டு நீண்ட நேரம் அதைக் கையில் வைத்து முகர்ந்து கொண்டே இருந்தார். பாவேந்தர் அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கே வழக்கம்போல் எழுந்து பின்னால் சென்று விட்டார். நாங்கள் அவர் அறைக்குள் நுழைந்தபோது மேஜைமீது கீழ்க்கண்ட கட்டளைக் கலித்துறை இரவின் இளவரசி என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. கரவில் இருந் தொரு மங்கைனன் வரவிடுகின்றாள் வரவில்லை என்னெதிர் வாயிதழைத் தரவில்லை உண்ணவும் என்றேன்என் தோழனும் தையலவள் இரவின் இளவர சிப்பெயர்ப் பூவென் றியம்பினனே.