பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 மார்கழியின் உச்சியில்...! கவிஞர் சுரதா "சுப்புரத்தின தாசன் என்று பெருமிதத்தோடு தம்மை கூறிக் கொள்ளும் இச்சிக்கல் இராச கோபாலக் கவிஞர் எழுதும் பாணியில் பாவேந்தரிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். பாவேந்தரிடத்தில் கூட்டுப் புழுவாக இருந்து இன்று பட்டொளி வீசிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சி! இவர் பணக்காரச் சாதியில் பிறக்கவில்லை, முன்னுக்குத் தள்ளப்படுவதற்கு! சொந்தக்காரர் யாரும் பத்திரிகை நடத்தவில்லை. மேடை விளம்பரம் பெறுவதற்கு! எந்த அரசியல் கூடாரத்திலும் இவர் நிலையாகத் தங்குவதில்லை, மேடை விளம்பரம் பெறுவதற்கு! எவரும் எடுத்து நிறுத்தாமல் தாமே எழுந்து நிற்கும் கவிஞர் சுரதா உடம்பு தேய உருண்டு சென்று கயிலையைக் கண்ட நாவுக்கரசர் போல, உழைத் துழைத்துப் புகழ்க் கயிலையை எட்டிப் பிடித்தவர்! எழுத்துச் சிக்கனக்காரர்! தந்தக் கவிதைச் சிற்பி! சுரதாவுக்கு இணை சுரதாதான்! என்று பாவேந்தரால் பாராட்டப்பட்ட இவர் பாவேந்தரோடு வாழ்ந்த நாட்களை வண்ணக் குழம்பில் தீட்டிக் காட்டியிருக்கிறார். . .