பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 முருகுசுந்தரம் வாழ்கவே நன்முருகு சுந்தரந்தான் வண்மையெல்லாம் சூழ்கவே சீர்த்தி தொடர்ந்து" என்று வாழ்த்தியுள்ளார். சேலத்தில் 30 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றி ஒய்வுபெற்ற கவிஞர் முருகு சுந்தரம் அவர்கள் ஓய்விற்குப்பின் தன்னுடைய இலக்கியப் பணியை இடைவிடாது செய்தார். கொல்லிமலைப் பலாவும் சேலத்து மாங்கனியும் சேர்ந்து இணைந்து உருப்பெற்ற கவிதைக்கனி கவிஞர் முருகுசுந்தரம் அவர்களின் இந்நூல் வெளியிடும்போது அவர் நம்மிடையே இல்லை என்பது மிகுந்த வருத்தத்தைத் தரக்கூடியதாகும். அவருடைய வாழ்வு நீர் மேல் எழுதிய எழுத்துப்போல் அமையாமல் கல்லின் மேல் பொறித்த எழுத்து போல் நின்று நிலைத்து என்றும் வாழும் என்பதற்கு இந்நூல் எடுத்துக்காட்டாகும். (சி. தங்கமுத்து)