பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் {33 பார்ப்பனர். மேலும் தாசன் என்பது வடசொல். 'பாரதிதாசன் என்றால் பாரதிக்கு அடிமை என்றல்லவா பொருள்? என்று சிலர் அவரைக் கேட்பதுண்டு. அதற்குப் பாவேந்தர் ஆமாண்டா! நான் பாரதிக்கு அடிமை தான்!” என்று சட்டென்று கூறுவார். பாரதிதாசன் என்ற பெயர் நாட்டில் விளம்பரமாகத் தொடங்கியதும் அப்பெயரைப் பின்பற்றித் தாசன் தாசன் என்று கவிஞர்கள் புனை பெயர் வைத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. என்னையும் அவ்வாசை பற்றிக் கொண்டது. ஒரு நாள் ஒரு பாடலை எழுதி அதன் கீழே சுப்புரத்தின தாசன் என்று கையெழுத்திட்டிருந்தேன். அதைப் பார்த்ததும் ஏம்ப்பா இதெல்லாம்?' என்றார். இவ்வாறு சொன்னாலும் அவருக்கு உள்ளூர மகிழ்ச்சிதான். பிறகு நான் அவருக்குக் கடிதம் எழுதும் போதெல்லாம் சுப்புரத்தினதாசன் என்றே கையெழுத்திட்டு எழுதுவது வழக்கம். ஒரு முறை கடிதம் எழுதிய போது, முழுப்பெயரையும் எழுதுவதற்குக் கீழே இட மில்லை. சுரதா என்று சுருக்கமாக எழுதினேன். பிறகு அந்த ஆணி களைப் (புள்ளிகளைப்) பிடுங்கிவிட்டுச் சுரதா என்றே கையெழுத் திட ஆரம்பித்தேன். அப்பெயரே எனக்கு நிலைத்து விட்டது. பாவேந்தருக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு நான்கு ஆண்டுகள் நீடித்தது. புதுவையிலும் எங்கள் ஊரிலுமாக என் வாழ்க்கை கழிந்தது. கவித்துறையில் ஈடுபாடும், ஆற்றலும் என்னிடத்தில் வளர்ச்சி பெற்றன. பாவேந்தர் தொடர்பால் என் படைப்பாற்றல் கூர்மை பெற்றது. 1944ஆம் ஆண்டு பாவேந்தர் இன்ப இரவு என்ற நாடகக் குழுவை நிறுவினார். நாமக்கல் செல்லப்ப ரெட்டியாரும், பொன்னி ஆசிரியர் முருகுசுப்பிரமணியமும், பெரியண்ணனும், பாவேந்தருக்கு உறுதுணையாக இருந்து இன்ப இரவு நாடகக் குழுவைப் பொறுப்பேற்று நடத்தினர். பாவேந்தர் படைப்பில் உள்ள இயல் இசை நாடகப் பகுதிகள் இன்ப இரவில் இடம்பெற்றன. இசையமைப்பாளராகிய ஞானமணியும், திருவள்ளுவர் படத்தை எழுதிப் புகழ்பெற்ற வேணுகோபால சர்மாவும், நானும் அதில் நடிகர்களாக இடம் பெற்றிருந்தோம். இன்ப இரவு நாடகம் சேலம் சென்ட்ரல் திரைப்படக் கொட்டகையில் முதன் முதல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இரண்டாவதாக நாமக்கல்லில் தொடர்ந்து நடைபெற்றது. அந்நாடகத்திற்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பிருந்தும் அனுபவக் குறைவின் காரணமாகத் தொடர்ந்து நடத்த முடியாமல் போயிற்று. பாவேந்தரின் பாடல்களுக்கு இசையமைத்து ஞானமணி மிக இனிமையாகப் பாடினார். அவர் பாடலைக் கேட்டவர் எல்லோரும் ஞானமணி என்ற பெயர்