பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 139 கல்வி பயிலும் போதே கவியரசருக்குத் தாய்மொழி மீது தனியாத பற்றும், கவிபாடும் வேட்கையும் நிறைந்திருந்தன. அதற்குத் துண்டு கோலாய்ப் பாரதியாரின் கூட்டுறவு-புதுவையில் பாரதியார் புகலிடம் தேடிவந்த போது-ஏற்பட்டது. பாரதியாரின் பாடல்கள் இவருள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன; இவரையும் எழுதத்துண்டின. செஞ்சொற்சுவை நனி சொட்டச் சொட்டச் சிறந்த தோத்திரப் பாடல்கள் பல அப்பொழுதே பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளார். இவர் பிரெஞ்சு அரசாங்கத்தில் தமிழாசிரியர் பணியேற்றுச் சுமார் முப்பதாண்டுகள் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். தமிழாசிரியர் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது தன்மான இயக்கத் தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. இவருக்குத் தன்மான இயக்கத் தொடர்பு ஏற்பட்டது என்பதைவிட, இவர் உள்ளத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த தன்மான உணர்வு-கொடுமையை எதிர்க்கும் துணிவு-தாய்மொழிப்பற்று ஆகியவை இவரைத் தன்மானக் கவிஞராக ஆக்கின என்றே சொல்லலாம். அப்போது புதுவையில் வாழ்ந்த-பிரெஞ்சு மொழியும் தமிழும் நன்கறிந்த முத்தையா முதலியார், அவோக்கா (வழக்கறிஞர்) செல்ல நாயகர், அவோக்கா பெருமாள், நோயேல் போன்றவர்களுடன் சேர்ந்து கவியரசர் தன்மான இயக்கப் பணியைப் புதுவையில் பல எதிர்ப்புகளுக்கிடையே தோற்றுவித்துப் பணி புரிந்து வந்தார். அவர்களுள் பெருந்துன்பத்துக்கு அரசாங்கத்தாரால் ஆளாக்கப்பட்ட நோயேல் என்பவர் கவியரசரின் உயிர் நண்பராவார். அண்மையில் புதுவையில் நடந்த கவியரசரின் எண்பதாவது ஆண்டுவிழாவில் அவருடன் கலந்து பேகம் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்நாளில் தன்மானக் கவிஞராக இருந்த ஒரே காரணத்தால் அரசாங்கத்தாலும், பொதுமக்களாலும், படித்த ஒரு சிலராலும் இவரடைந்த அல்லல்கள் பலப்பல. அரசாங்கம் அவரை அடிக்கடி வேறு ஊர்களுக்கு மாற்றிவிடும். பல தொல்லைகள் தரும். ஆனால் கவியரசர் அதற்கெல்லாம் சளைத்ததே கிடையாது. போக்குவரவு வசதி இல்லாத இடங்களிலேயே இவர் தமிழாசிரியர் பணிநடத்தப் பெரும்பாலும் உத்தரவு வரும். எங்கே சென்றாலும், எதிர்ப்பும் இவரைத் தொடர்ந்து கொண்டே வரும். இவர் காலத்திலேயே இவரைப் போன்று தமிழாசிரியர் பணிபுரிந்து வந்த துரைசாமி முதலியார் என்னும் துரைசாமி வாத்தியார்’ இவருக்குக் கொடுத்துவந்த தொல்லைகள் சொல்லிமுடியா. இவரைப் பற்றிச் சுயமரியாதைச் சுப்பன் என்னும் தலைப்பில்