பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பாவேந்தரோடு நான் சில நினைவுகள் எத்தனையோ கட்டுரைகள் வெளிவரும். அவற்றிற்கெல்லாம் ஆணித்தரமான காரண காரிய விளக்கங்களை எழுதிப் பகைவரான துரைசாமி வாத்தியாரை முறியடித்து வெற்றிவாகை சூடினார் கவியரசர். ஒருமுறை துரைசாமி வாத்தியார் கவியரசரைப் பற்றி "சுப்பு வால் முளைத்தகவி' என்று ஈற்றடி அமையும்படி ஒரு வெண்பா எழுதியிருந்தார். சுப்புவால் முளைத்தகவி’ எனவும், சுப்பு. வால்முளைத்த கவி எனவும் இருபொருள்படக் குறும்புத்தனமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்ட கவியரசர், அவருக்குத் தக்கபடி கவிதையிலேயே தோண்டி துரைசாமி என இருபொருள்படச் சாட்டையடி கொடுத்திருந்தார். துரைசாமி வாத்தியாரைத் தோண்டி துரைசாமி என்றே கூறுவதும் எழுதுவதும் பின்னர் கவியரசரின் வழக்கமாகிவிட்டது. கவியரசர் பாரதிதாசனுக்கும் பண்டிதர் துரைசாமி முதலியாருக்கும் கருத்து வேற்றுமை பலப்பல உண்டு. அதன் காரணமாக இருவரிட மும் பகையுணர்ச்சி வளர்ந்திருந்தது. இப்பகையுணர்ச்சியின் அடிப்படையில் அக்காலத்திலேயே பண்டிதர் மாணவர் குழு ஒன்றும், பாவேந்தர் மாணவர் குழு ஒன்றும் புதுவையில் இருந்து வந்தன. பண்டிதரும் பாவேந்தரும் கொள்கையில் முரண்பட் டிருந்தாலும் தமிழை வளர்க்கும் நோக்கத்தில் ஒன்றுபட்டிருந்தனர். புதுவைப் பிரெஞ்சு அரசாங்கத்தாரால் நடத்தப்படும் தமிழ்த் தேர்வுகட்கு இவ்விருவருமே ஆய்வாளர்களாக - தலைமைத் தேர்வாளர்களாக நியமிக்கப்படுவதுண்டு. இவ்வாறு நடந்த ஒரு தேர்வின்போது பாவேந்தரிடம் பயின்ற நான்,துரைசாமிப் பண்டிதர் முன் தேர்வுக்காக நிறுத்தப்பட்டேன். பண்டிதர் என்னிடம் இலக்கண இலக்கியங்களிலிருந்து பலப்பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். நான் பாரதிதாசனிடம் தமிழ் பயின்று வந்திருந்ததை அறிந்திருந்தமையாலும், அவரிடம் கொண்டிருந்த பகைமை காரணமாகவும் என்னிடம் சிக்கலான கேள்விகளைக் கேட்டு விடையை எதிர்பார்த்திருந்தார். நான் தெளிவாகத் தெரிந்த விடைகளைக் கூடத் தயங்கித் தயங்கிக் கூறிக் கொண்டிருந்தேன். அப்போது, "ஏய் தைரியமாகப் பதில் சொல்!” என்ற உரத்த குரல் ஒன்று கேட்டது. ஒலிவந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தேன்; பாவேந்தரின் ஆணை என்பதை உணர்ந்தேன். அதன்படி முன்பைவிட தைரியமாகத் தங்குதடையின்றி விடையிறுத்தேன். முடிவில், அத்தேர்வில் வெற்றிபெற்றேன். என்னோடு கவியரசரிடம்