பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் * - [4] தமிழ் பயின்ற மற்ற மாணவர்களும் வெற்றி பெற்றனர். தம் மாணவர் அனைவரும் வெற்றி பெற்றதால் கவியரசருக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. துரைசாமி வாத்தியார் நல்ல தமிழறிஞர். கண்ணப்பர் கலம்பகம்’ போன்ற ஆத்திக நூல்களை எழுதியவர். அவர் மறைந்தபோது பகையென்று பாராது ஓடோடி வந்து, என்றுமே கலங்காத கவியரசர் கண் கலங்கி நின்றார். 'துரைசாமி மறைந்தான். ஆம்; அவன் எனக்குப் பகைவன்தான். அவன் தமிழறிவைப் பாராட்டுகிறேன். தமிழ் என் உயிர்! தமிழைப் பாராட்டப் போகிறேன்' என்று புதுவையில் ஒரு தனிக்கூட்டம் ஏற்பாடு செய்து பகைவராகிய பண்டிதர் துரைசாமி முதலியாரை இரண்டு மணி நேரம் பொதுமக்கள் முன்னிலையில் வாயாரப் பாராட்டி அஞ்சலி செய்த பெருந்தன்மை பாரதிதாசனை விட வேறு எவருக்கும் இருந்திருக்கவில்லை; இனி இருக்கவும் முடியாது! துரைசாமி வாத்தியார் மாணவர் குழுவில் குறிப்பிடத்தக்கவர் இலக்கணச் செம்மல், வித்துவான் குமாரசாமி செட்டியார் ஆவார். இவர் நல்ல தமிழ் இலக்கண இலக்கிய அறிஞர். இவரும் கவியரசரைப் போலவே அரசாங்கப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணிபுரிந்து அண்மையில் ஒய்வு பெற்றவர். இவரிடம் பயின்ற மாணவர்கள், இவருக்குப் பொன்னாடை போர்த்த வேண்டும் என ஏற்பாடு செய்து, கவியரசரிடம் கருத்தைத் தெரிவித்தனர். கவியரசர் மனமுவந்து, தம் பகைவரின் மாணாக்கன் என்பதை உணர்ந்தும் முன்வந்து, சென்னை முதலமைச்சராக இருந்த திரு. காமராசர் அவர்களைத் தாமே சென்று அழைத்து வந்து, தம் தலைமையிலேயே காமராசர் அவர்களால் இவருக்குப் புதுவை வேதபுரீசுவரர் கோயிலில் பொன்னாடை போர்த்தச் செய்து, தமிழுக்குத் தம் மாட்டுள்ள தனிப்பற்றையும், எவராக இருந்தாலும் தமிழைப் பயின்றவரைச் சிறப்பிக்கின்ற தம் தூய தமிழ் உள்ளத்தையும் விளக்கியுள்ளார். பாவேந்தர் மாணவர் குழுவில் குறிப்பிடத்தக்கவர்கள் நானும் புதுவைச் சிவம் எம்.பி.யும், இன்னும் சிலரும் ஆவோம். கவியரசர் தமிழ்ப்பாடம் நடத்தும் முறையே ஒரு தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். மிகத் தெளிவாகவும், இனிமையாகவும் அவர் பாடம் நடத்துவார். புதுவையில் தன்மான இயக்கம் தளிர்விட்டுக் கொண்டிருந்தபோது கவியரசர் அவர்களின் கடும் உழைப்பால், பெருமுயற்சியால் 1) இக்கட்டுரை 1964 மேத்திங்களில் எழுதப்பட்டது.