பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பாவேந்தரோடு நான் சில நினைவுகள் புதுவையிலுள்ள ஒதியன் சாலையில் அமைந்த திரைப்படக் கொட்டகையில், பெரியாா ஈ.வே. இராமசாமி, அறிஞா அண்ணாத்துரை ஆகியோரை அழைத்து மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் இன்றைய அமைச்சருமாகிய திரு. வ. சுப்பையாவைச் சிறையிலடைத்து வைத்திருந்தனர். அக்கட்சியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த அதுபோது பாரிசில் படித்துவிட்டுப் புதுவைக்குத் திரும்பிவந்திருந்த புதுவையைச் சேர்ந்த திரு. லாம்பேர்சாவன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். லாம்பேர் சாவனோ தமிழ் அறியாதவர்; பிரெஞ்சும் ஆங்கிலமும் அறிந்தவர். அவர் தூண்டுதலின் பேரில், பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த சிலர் புதுவையில் நடைபெறும் தன்மான இயக்க மாநாட்டைக் கலைக்க முன்கூட்டியே சதித்திட்டம் தீட்டியிருந்தனர். அப்போது புதுவையில் அகில இந்தியக் காங்கிரசுக் கட்சி வளர்ந்திருக்கவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே காங்கிரசின் கொள்கைகளை ஆதரித்து, அதில் சேர்ந்திருந்தனர். அவர்களில் முக்கியமான ஒருவர் அன்சாரி துரையாவார். இவர் மாநாடு நடைபெற இருந்த அன்று காலை சிறுவர்கள் சிலருக்குக் காசு கொடுத்து, "பெரியாரே! திரும்பிப் போ?” என்று கத்தும்படி செய்திருந்தார். தன்மான இயக்க மாநாடு புதுவை ஒதியன் சாலையில் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிற்று. கூட்டம் மிகுதியாக இருந்தது. வெள்ளை யன் ஒருவன் தலைமையிலிருந்த புதுவைக் காவல் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். மாநாட்டிற்குக் கவியரசர் தலைமை வகித்தார். அறிஞர் அண்ணாவும் புதுவை அவோக்கா பெருமாள், நோயேல் போன்றவர்களும் வந்திருந்தனர். பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த சிலர் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கினர். கொட்டகையில் ஒரே கூச்சல் குழப்பம்! கற்கள் தகரக் கொட்டகை மீது வீசப்பட்டன! பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் படைத் தலைமை அதிகாரி, வெள்ளைத் தலைமை அதிகாரி, "இக்கூட்டம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும்’ என்று நயவஞ்சமாகக் கூறியிருந்தார். அதனால், காவல் படையினரின் காப்பு பயனளிக்கவில்லை! காலிகளின் கைகள் ஓங்கின. காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சி போன்று இம்மாநாடும் தங்களை எதிர்க்கும் கூட்டம் என்று எண்ணி வெள்ளை அதிகாரிகள் கண்காணிப்பை அசட்டை செய்து விட்டனர்.