பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 13 புறம் பாவேந்தர் வாழ்க்கை ஒரு பரந்த கடல், இந்நூல் அதன் அலை ஒதுக்கிய முத்து. இன்னும் சலாபமே கைபடாமல் இருக்கிறது. பலபேர் மூச்சடக்கி உள்ளே மூழ்க வேண்டும். ஒரு பெருங்கவிஞனின் படைப்பு சமுதாயத்துக்கு எவ்வளவு முக்கியமானதோ அதுபோல்-அவன் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் முக்கியமானவை; சுவையானவை, ஆங்கில நாட்டில் வோர்ட்ஸ் வொர்த்தின் மூக்குக்கும், கீட்சின் தலை முடிக்கும் ஆராய்ச்சி உண்டு. சில கவிஞர்கள் வரலாற்றின் குழந்தைகள்; சில கவிஞர்கள் வரலாற்றின் தந்தைகள். பாவேந்தர் - இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் - என்ற பாவேந்தரின் தொடர் இன்று பழமொழியாக நிலைத்துவிட்டது. பாவேந்தர் இன்று ஒரு பல்கலைக்கழகமாக நிலைத்துவிட்டார். இளமையிலிருந்தே கவிஞர் வரலாறுகளைப் படிப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். ஜான்சன் எழுதிய ஆங்கிலக் கவிஞர் வரலாறு (Lives of English Poets), Liravaudio stopouggorsårfair sugavrrp (Boswell's Life of Johnson), ஃப்ரெஞ்சு எழுத்தாளன் ஆண்டரூ மொராய் எழுதிய பைரன் வரலாறு (Byron), ஷெல்லி வரலாறு (Aerial), பாப்லோ GNSGL—rraúlgör SGör aUgavagy (Pablo Neruda's Memoris), Gu.rrrr. GTKLpSuu மகாகவி பாரதியார் ஆகியவை என் வாழ்க்கையில் நான் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள். இந்நூல்களைப் படித்தபோது