பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 gospoŝucoenumit வந்தது. அதற்காக அவர்கள் தமது புலமையை ஆண்டவனைப் பாடுவதிலும், தலபுராணம், அந்தாதி, கோவை போன்ற நூல்கள் எழுதுவதிலும் செலவிட்டு வந்தார்கள். ஆனால் தேசிய இயக்கம் ஏற்பட்ட பிறகு, தலைவர்களாயுள்ளவர்கள், தங்கள் கருத்தை மக்களிடம் பரப்பவேண்டிய அவசியத்துக்கு ஆளானார்கள். அதனால் பாரதியாரும் தாம் எழுதுகிற பாட்டின் பொருளைப் பிறர் உதவியின்றிச் சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கோடு, எளிய நடையில் எழுதலானார். இதற்காகத்தான் எதிர்ப்புக் கிளம்பியது. இதில் பாரதியாருக்கு ஆதரவாக இருந்தார். திரு. பாரதிதாசனவர்கள். ஒருசமயம் திரு.பாரதியாரவர்கள் தம்மைச் சூழ்ந்திருந்தவர்களிடம் "சுப்புரத்தினமும் பாட்டு எழுதுவான் என்று சொல்லி, எழுது என்று கட்டளையிட்டவுடன், எங்கெங்குக் காணினும் சக்தியடா’ என்ற பாடலைப் பாரதிதாசன் எழுதியதாகச் சொல்வர். இதுதான், அவர் எழுதிய முதற்பாட்டு என்று கூறுவோரும் உண்டு. அவர் இதற்குமுன் பல பக்திப்பாடல்கள் இயற்றியிருக்கிறார். வேண்டுமானால், திரு பாரதியாரவர்களைப் பின்பற்றி எளிய நடையில் எழுதிய பாடல்களுள், இதுதான் முதற்பாட்டு என்று சொன்னால், பொருத்தமாக இருக்கும். திரு. பாரதிதாசனவர்கள் பாட்டு எழுதத் தொடங்கினால் பக்கத்தில் அகராதி இருக்காது; யோசித்து யோசித்து, அடித்தல் திருத்தலுடன் எழுதமாட்டார். தரையில் ஒரு பாயை விரித்துக் கவிழ்ந்து படுத்த வண்ணம் எழுதத் தொடங்குவார். சில சமயம் சாய்வு நாற்காலியிலமர்ந்து, அதன் நீண்ட கைப்பிடியின் குறுக்காக ஒரு மனையைப் பொருத்தி எழுதுவார். பாடல் எழுதி முடியும்வரை, சிகரெட் தொடர்ந்து புகைந்தபடியே இருக்கும் எழுத்தோட்டமும் விரைந்து சென்று கொண்டேயிருக்கும். ‘புலவருக்கு, வெண்பா புலி’ என்பார்கள். அத்தகைய வெண்பாவினும் கடுமையானது, வண்ணப்பாடல். திருப்புகழ்ச் சந்தம் போன்ற வண்ணப்பாடல்களையும் மிக எளிதாக விரைந்து எழுதும் ஆற்றல் திரு. பாரதிதாசனவர்களிடம் அமைந்திருந்தது. உள்ளத்தைக் கவரும் வார்த்தைகளும் அவர் பாடலில் முந்திக் கொண்டு வரும். இப்படிப்பட்ட ஒருசில கவிஞர்களைப் பார்த்துத்தான் ஒரு சிறந்த கவிஞன் பிறவியிலேயே கவிஞனாகப் பிறக்கிறான் என்று கூறுகிறார்கள் போலும். திரு. பாரதிதாசனவர்களிடம் குறும்புத்தனமும் நகைச்சுவைப் பேச்சும் இயல்பாகவே அமைந்திருந்தன. அதனால் அவருடைய