பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

шквамѣви-есѣчковарсоварамъ 153 மாணவர்கட்கும் கற்பித்துவிடவேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் உடையவர் கவிஞர். நான் அவரிடம் சேர்ந்த புதிதில் கவிதைத் துறையைப் பற்றி எனக்கு விளங்காத ஐயங்களைக் கவியரசரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பேராசை இருந்தும், அச்சத்தின் காரணமாக ஒதுங்கியே இருந்து வந்தேன். போகப்போகத்தான் எனக்கு ஒரு பேருண்மை விளங்கியது. தம் மாணவர்களே கேட்காவிட்டாலும் தாமாகவே அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற பெரிய மனம் படைத்தவர் பாவேந்தர் என்பதே அவ்வுண்மை. பாவேந்தர் கவிதைகளை எழுதி முடித்துவிட்டு அவற்றைப் படியெடுக்க என்னை அழைப்பார். அருகில் சென்றவுடன் தாம் எழுதிய கவிதையை நயம்பட நடிப்புப் பாவனையோடு எனக்குப் படித்துக் காண்பிப்பார். பிறகு "இந்த இடத்தில் இப்படி ஏன் வந்தது தெரியுமா? இது என்ன இலக்கணம்? இப்படித்தான் பாடல்களில் நம் எண்ணங்களை-கொள்கைகளை நுழைக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டியதைப் புதிய அமைப்பில் நான் இப்படிச் செய்திருக்கிறேன்” - என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் மீண்டும் மீண்டும் விளக்கி, சொல்ல நினைத்ததை என் உள்ளத்தில் பதியுமாறு தெளிவாகப் புரிய வைத்து விடுவார். எத்தனைமுறை, எத்தனை வகையான கேள்விகளைத் திருப்பித் திருப்பிக் கேட்டாலும் சிறிதும் சலிப்படையாமல், முகங்கோணாமல் புரியும்படி சொல்லிக் கொடுப்பார். நியாயமான கேள்விகளுக்கு அடிமுதல் துணிவரை விளக்கிக் கூடுமானவரை ஆத்திரம் அடையாமல் சொல்லிக் கொடுப்பது அவரது தலையாய பண்புகளில் ஒன்று. ஆனால் எல்லாம் தெரிந்தது போல் தலையாட்ட ஆரம்பித்தாலோ அது அவரைக் கோபப்பட வைத்து விடும் என்பதை அவரை அறிந்தார் அறிந்த ஒன்று. சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அப்போது பயின்று வந்தவரும், என் நெருங்கிய நண்பருமான கவிஞர் முருகு சுந்தரம் அடிக்கடி கவிஞரைப் பார்க்க வருவார். புரட்சிக் கவிஞரின் மேல் அவருக்குத் தணியாத ஆசை. அவர் வரும்போதெல்லாம் கவிஞரிடம் ஒயாது எதையாவது கேட்டுக் கொண்டே இருப்பார். கவியரசரின் எழுபதாண்டு அனுபவத்தை நண்பர் முருகு தமது ஆறுமாதப் பயிற்சிக் காலத்திற்குள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துடிப்புடையவர். ஒருநாள் மாலை ஐந்து மணி இருக்கும். அன்று வந்திருந்த திரு. முருகுசுந்தரம் கவிஞரிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் கூடத்தில் குயில் ஏட்டின்