பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 iளத்தில் - s - - & நிறுத்துகிறார் கவிஞர். இதற்குள் சைவ உணவுத் தோழர் முக்கால் பங்கு கவிஞர் வழிக்கு வந்து விட்டவராகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சித்து, வேக வேகமாக தலையை ஆட்டுகின்றார்: ஆமாம் போடுகின்றார். மீண்டும் கவிஞர் தொடர்கிறார்: "கத்திரிக்காய் வெண்டைக்காயில் என்ன சத்து இருக்கிறது என்றால் வைட்டமின் ஏ,பி,சி என்று அடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். ஒரு வெண்டைக்காய்ச் சத்தும் அவற்றில் இல்லை. இவைகளை நம்பி நீ இருப்பதால் தான் இப்படி நோஞ்சானாக இருக்கிறாய்! என்னை பார்! என் உடம்பைப் பார்! நான் புலிக்கறியே சாப்பிடுகிறேன் தெரியுமா?" அங்கிருந்தவர் அத்தனை பேரும் ஆவென்று வாயைப் பிளக்கின்றனர். "பொன்னடி! அந்த டப்பாவில் இருக்கும் புலிக்கறி வற்றலை இவர்களுக்கு எடுத்துக் கொண்டு வந்து காட்டு!" என்று ஆணையிடுகிறார். (அப்போது ஒரு புகழ்பெற்ற நடிகர் கவிஞருக்குப் புலிக்கறி வற்றல் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார்.) அந்த நண்பர்கள் நான் புலியையே கொண்டுவந்துவிடப் போகிறேன் என்று பயந்தோ என்னவோ, ஊஹாம். அதெல்லாம் வேண்டாங்கையா! நீங்க சொன்னாப் போதாதா?’ என்று கையைப் பிசைந்து கொண்டு கவிஞரைப் பார்த்து ஒரே ஒற்றுமையாகக் குழைந்தனர். அந்த ஒல்லியுடம்புச் சைவ நண்பரும் ஏனையோரும், 'ஐயா! உங்கள் வீட்டுச் சுவையான சாப்பாட்டைச் சாப்பிட எங்களுக்கு விருப்பந்தான்; ஆனால் வண்டிக்கு நேரமாகி விட்டது!’ என்று சாக்குப் போக்குக் கூறித் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று புறப்பட்டு விட்டனர். பாவேந்தர் படமெடுக்க வந்ததேன்? ஒருநாள் நள்ளிரவு 1.30 மணி. தியாகராய நகர் இராமன் தெருவிலுள்ள பாரதிதாசன் பட நிறுவனத்தின் மூலை அறையொன்றில் 100 வாட்ஸ் மின்விளக்கு ஒன்று ஒளிக்குழம்பை உமிழ்ந்து கொண்டிருந்தது. அது பாவேந்தரின் தனியறை. கட்டிலின்மேல் கால்களை மடித்து வைத்துத் தமது படர்ந்த மார்பை இடது கையால் தடவிக் கொடுத்தபடி புத்தரைப் போல் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறார் கவிஞர். மேலாடை இல்லாத அவர் மாநிற மேனியும் அறிவுக் கண்களும் ஆற்றல் மிக்க அந்த விளக்கொளியில் மின்னிக் கொண்டிருந்தன.