பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-இருபல்கலைக்கழகம் 157 அந்த அமைதியான நள்ளிரவில் அவர் எடுக்கவிருந்த பாண்டியன் பரிசுத் திரைக்கதைக்கான உரைநடையைச் சொல்லிக் கொண்டு வருகிறார். கணிர் கணிர் என ஒலிக்கின்ற அவருடைய கம்பீரக் குரலிலே மூப்பின் காரணமாகச் சில நேரங்களில் கரகரப்புக் கலக்கிறது. சிங்கத்திற்கு முன் அமர்ந்திருந்த சுண்டெலியைப்போல் அவரெதிரில் அமர்ந்து, அவர் விடுவிடென்று சொல்வதை நான் வேகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். திடீரென அவரின் ஆர்ப்பொலி தடைப்படுகிறது. அவருடைய பேச்சு பாண்டியன் பரிசுப் படப்பிடிப்பின் பக்கம் திசை திரும்புகிறது. "பாண்டியன் பரிசுத் தலைவனும் தலைவியும் கடைசியில் ஒன்றுகூடிப் பூங்காவில் ஆடிப்பாடுவதாக நேற்று ஒரு பாட்டு எழுதினேனே... என்ன அடி? உம். (அவரே பாடுகிறார்) விடியும்போது விடியட்டுமே வெண்ணிலாவே!-பொழுது விடியும்வரை அமுதமழை வெண்ணிலாவே! இது எப்படி! எளிமையாக இருக்குமல்லவா?” "பாட்டு எளிமையாக இருப்பதோடு கருத்தாழத்தோடும் இருக்கிறதையா' "இந்தப் பாடல்வரும் காட்சிதான் படத்தின் கடைசிக் காட்சி. எனவே நன்றாக அமைய வேண்டும். மைசூர் பிருந்தாவனத்தில் இக்காட்சியைப் படமெடுக்க வேண்டும். மைசூரில் உள்ள ஆறு ஒன்றில் காதலர் படகில் பாடிச் செல்வதுபோல எடுக்க வேண்டும். வெளிப்புறக் காட்சிகளுக்கு மைசூர் ஏற்ற இடம்" "படகில் காதலர் பாடிச் செல்வதுபோல் பல திரைப்படங்களிலும் வந்திருக்கிறத்ே ஐயா" என்று நான் முந்திரிக்கொட்டைத் தனமாக உளறிவிட்டேன். கவிஞர் என்ன சொல்வாரோ என்று உள்ளுக்குள் நடுக்கந்தான். "அப்படியா! அந்த இடத்தில் வேண்டுமானால் கொஞ்சம் மாற்றம் செய்து கொள்ளலாம்" என்று கூறிய கவிஞர் நீண்ட அமைதியில் மூழ்கி விடுகிறார். அவருடைய இடையில் நெகிழ்ந்திருந்த கட்டம் போட்ட லுங்கியை, உடம்பை அசைத்து இரண்டு கைகளாலும் கட்டிக் கொண்டு மேலும் பேசுகிறார். "நான் இப்படமெடுக்கும் முயற்சியில் பலவாறாகத் தொல்லைப் படுகிறேன். படத்துறையில் உள்ளவர்களிடமெல்லாம், என்