பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 iளத்தில் 金 δωρά 多,叠 இயற்கைக் குணத்துக்கு மாறாக நடந்து கொள்கிறேன். இவையெல்லாம் நான் எதிர்பார்க்காத-என் வாழ்க்கையில் நடக்கக்கூடாத நிகழ்ச்சிகள்! இவை பற்றியெல்லாம் நான் சிறிதும் பொருட்படுத்தாமல் இருப்பது எதற்காகத் தெரியுமா? இரண்டே இரண்டு காரணங்களுக்காகத்தான். "ஒன்று; போகத் தகாத வழியில் போய்க் கொண்டிருக்கும் திரைப்படத் துறையை நமது தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்படும் சீர்திருத்தப் புரட்சிக் கூடமாக மாற்ற வேண்டும்” "இரண்டு; இந்தப் படத்தின் மூலம் கிடைக்கின்ற வருவாயில் குறைந்தது இரண்டு இலக்க ரூபாயை ஒதுக்கித் தமிழருக்கு அறிவொளியூட்டும் பெரிய நூலகம் ஒன்றைச் சென்னையின் மையமான இடமொன்றில் அமைக்க வேண்டும்" "அந்த நூலகத்தில் இல்லாத பயன்மிகு நூல்களே உலகத்தில் இல்லை எனும் வகையில் பல துறை இலக்கியச் செல்வங்களையும், ஆராய்ச்சி நூல்களையும் குவித்து வைக்க வேண்டும். அந்த நூலகத்தில் பிறமொழி கற்றறிந்த தூய தமிழறிஞர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். அவர்கள் உலகின் மூலை முடுக்குகளிலுள்ள சீர்திருத்த முற்போக்கு இலக்கியங்களையெல்லாம் தமிழிலே மொழிபெயர்க்க வேண்டும். அதேபோன்று தமிழறிஞர்களின் தரமான இலக்கிய நூல்களையெல்லாம் மொழிபெயர்த்து உலகெல்லாம் பரப்ப வேண்டும். மேலும் இந்த நூலகத்தில் பல பிரிவுகளை ஏற்படுத்தி, நைந்த எழுத்தாளர்களுக்கும், வறுமை வாய்ப்பட்ட கவிஞர்கட்கும் வேலை கொடுக்க வேண்டும். இந்தக் காரியத்தை ஒழுங்காகச் செய்தால், தமிழ்ச் சமுதாயத்தைப் பெரு முன்னேற்றத்தை நோக்கி இழுத்துச் செல்ல முடியுமென நம்புகிறேன். இந்த நன்முயற்சிக்கு நம் அப்பாதுரை, (பன்மொழிப் புலவர்) தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் பயன்படுவார்கள்." சற்று நிறுத்துகிறார்; சிந்திக்கிறார். "இந்த முயற்சியின் முக்கியமான உள்நோக்கம் உனக்குப் புரிகிறதா?” என்று கவிஞர் என்னைக் கேட்டார். "புரிகிறதையா!" என்று உணர்ச்சி வயப்பட்டுத் தலையாட்டுகிறேன். "தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு சென்றுள்ள சில போலிகள் மகாபாரதமும், கம்பராமாயணமும், கந்தபுராணமும் தமிழர்களின் தலைசிறந்த இலக்கியங்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்களாம்; மொழிபெயர்த்து நூல்வடிவில் வெளியிடுகிறார்களாம். இவை களைப் படித்த பிறநாட்டார் அவைகளின் கட்டுக் கதைகளையும்,