பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 159 மூடத்தனங்களையும் எண்ணி நம்மையெல்லாம் காட்டு மிராண்டிகள் என்று எள்ளி நகையாடுகிறார்களாம். தமிழரின் மானம், மரியாதையாவும் அங்கே கப்பலேறுகின்றன. இந்த நிலையை நீடிக்கவிடலாமா?... இதற்காகத்தான்... கவிஞர் நீண்ட பெருமூச்சு விடுகிறார். பிறகு, "சரி எனக்கு ஒரு சோடா உடைத்துக் கொடுத்துவிட்டு நீ போய்ப் படுத்துக் கொள்” என்கிறார். (தண்ணிருக்குப் பதிலாகச் சோடா குடிப்பதுதான் அப்போது கவிஞரின் பழக்கமாக இருந்தது) “கவிஞர் ஏன் படம் எடுக்க வந்தார்! இந்தத் தள்ளாத வயதில் இவருக்கு ஏனிந்த ஆசை என்றெல்லாம் குறுக்குக் கேள்வி கேட்டு, அன்று கிண்டல் செய்து அங்கலாய்த்துக் கொண்ட தமிழர்கள் இப்போதேனும் உண்மையைப் புரிந்து கொண்டால் நல்லது.