பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió0 எங்கள்தாத்தாதிருவாளர் கனகசபை முதலியார் புதுவையில் பெரிய வணிகர்; மளிகை மண்டியின் உரிமையாளர். கப்பலில் சரக்கு ஏற்றி பிரஞ்சு நாட்டுக்கு அனுப்பிவைப்பார். அவர் ஒருமுறை சரக்கு ஏற்றி அனுப்பிய கப்பல் கவிழ்ந்து போனதால் வளமான எங்கள் குடும்பமும் கவிழ்ந்தது. அப்போது எங்கள் தாத்தாவின் வயது என் தந்தையார் திருமதி சரசுவதி கண்ணப்பர் இவர் பாவேந்தர் குடும்பக் காவியத்தின் முதற்பாதை: பாவேந்தர் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி; தமிழுக்குப் பிறந்து தமிழுக்கே வாழ்க்கைப்பட்டவர். 'குடும்பவிளக்கு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் என்று அந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்படும் தலைவி இவரே! அறுபதாம் அகவையை நெருங்கிக் கொண்டிருக்கும் இவர், வீட்டு வேலைகளைச் சுறுசுறுப்போடு செய்யும் காட்சி, பறந்தனன் பச்சைப் பசுங்கிளி.....” என்ற பாவேந்தர் பாட்டை உள்ளத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது. குடும்பவிளக்கில் படம் பிடித்துக் காட்டப்படும் விருந்தோம்பும் அழகை, இன்றும் இவர் வீட்டுக்குச் சென்றால் சுவைத்து மகிழலாம். புக்ககத்திலிருந்து புதுவை வரும் இவரைப் பெருமாள் கோவில் தெருக்கோடியில் கண்டால் "பழனியம்மா! குடும்பவிளக்கு வருது!" என்று பாவேந்தர் பரிவோடு குறிப்பிடுவதுண்டு. சரசுவதி அம்மையார், பணித்த கண்களோடு தம் தந்தையாரை இக்கட்டுரையில் நினைவு கூர்கிறார். 6τζιρL5).