பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 என்தந்தையார் "என்னப்பா இப்படி எழுதியிருக்கறிங்க? என்று கேட்டால், விளக்கிலே எண்ணெய் தீந்து போச்சு. கூப்பிட்ட... யாரும் வரலை. இருட்டிலேயே எழுதிமுடிச்சுட்ட...' என்று கூறுவார். சுவாரசியமாக எழுதும் நேரங்களில் குப்புறப்படுத்து நெஞ்சுக்குத் தலையணையைத் தாங்கலாக வைத்துக் கொண்டு எழுதுவார். சில சமயங்களில் எழுதும்போது தாகமாக இருக்கிறது என்பார். சீரகம் போட்டுக் காய்ச்சி வடித்த நீரைக் கொண்டுபோய்க் கொடுத்தால் குடித்துவிட்டு மீண்டும் எழுதத் தொடங்குவார். அதிகாலை தொடங்கி ஒய்வொழிச்சல் இன்றி வேலை செய்யும் என் தாயார் அசதி காரணமாக இரவு எட்டு மணிக்கே படுத்துக் கொள்வார். படுத்தால் மீண்டும் அவரால் எழுந்திருக்க இயலாது. ஆனால் தந்தையாரோ இரவில் எழுதிக் கொண்டிருக்கும்போது பசியென்பார். நான் எழுந்து ஏதாவது தின்பண்டம் செய்து கொடுக்க வேண்டும். இரவு 1 மணிக்குப் பூசணி அல்வா கேட்பார். நடு இரவில் பல் தேய்த்து விட்டுச் சாப்பிடுவார். "இப்ப அழுத்திப் பல் தேச்சுட்டுக் காலையிலே லேசா துலக்கினாப் போச்சு!" என்று சிரித்துக் கொண்டே சொல்வார். எந்த வேலையையும் அனாவசியமாக நீட்டிக் கொண்டிருப்பது என் தந்தையாருக்குப் பிடிக்காத ஒன்று. பல் தேய்ப்பதாக இருந்தாலும் குளிப்பதாக இருந்தாலும், உடையுடுத்துக் கொள்வதாக இருந்தாலும் விரைவில் சுறுசுறுப்பாகச் செய்து முடிக்கவேண்டும்; இல்லாவிட்டால் கண்டிப்பார். சில சமயங்களில் எங்கள் வீட்டில் சமையல்காரர்கள் இருப்பார்கள். என் தந்தையாரின் சுவைக்கு ஏற்பச் சமையல் செய்ய முடியாமல் அவர்கள் விழிப்பார்கள். கோழியை அறுத்துத் துண்டு போடுவதிலும் கூட என் தந்தையாரின் விருப்பமறிந்து துண்டுபோட வேண்டும். இல்லாவிட்டால் திட்டிவிடுவார். கோழிக்கறியைச் சமையல்காரன் தான் சமைக்க வேண்டும். நானோ என் தாயாரோ அதில் தலையிடக்கூடாது. ஒருநாள் கோழிக்கறி, சமைக்கும்போது என் தாயாரை உப்புப் போட அனுமதித்ததற்காக அச்சமையல்காரனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார். எங்கள் வீட்டில் வேலை செய்த சமையல்காரர்களுக்கு, அவர்கள் வைக்கும் குழம்பைவிட நாங்கள் வைக்கும் குழம்புதான் மிகப் பிடிக்கும். ஒருமுறை என்தந்தையாரிடம் நற்சான்றிதழ் பெற்றுச் செல்வதற்காக ஒரு சமையல்காரன் வந்தான். இரண்டு நாள் வீட்டிலிருந்து சமைத்துப்போடு. உன்னுடைய சாப்பாடு எப்படி இருக்கிறது என்று சுவைத்துப் பார்த்து விட்டுச் சான்றிதழ் தருகிறேன் என்று என் தந்தையார் கூறினார். முதல் நாள் சமைப்பதாகச் சொல்லி அன்றைய