பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o - ர்-ஒரு - • - 169 பெரியாரைப் பின்பற்றும் தன்மான இயக்கத்தோழர்கள் சடங்குத் திருமணத்தை எதிர்ப்பவர்கள். ஆண் பெண் சமத்துவத்தை வற்புறுத்திப் பேசிய பெரியார், தாலி பெண்ணுக்குப் பூட்டப்படும் அடிமை சாசனம்' என்று அடிக்கடி குறிப்பிடுவார். அதனால் சீர்திருத்தத் திருமணங்களில் அன்று தாலிகட்டும் நிகழ்ச்சி இடம் பெறுவதில்லை. எனது திருமணப்பேச்சு நடைபெற்றபோது தாலி அணிவதற்கு என் எதிர்ப்பைத் தெரிவித்தேன். அப்போது என் தந்தையார், "கட்டிப்பாளையம் சிற்றுார் ஆயிற்றே! அங்கு ஏதாவது எதிர்ப்பும் பூசலும் ஏற்பட்டால் என்ன செய்வது? என்று கூறினார். “எதிர்ப்பதற்குத்தானே நாம் இருக்கின்றோம்" என்று நான் சொன்னேன். பிறகு புலி வில் கயல் பொறித்த மூவேந்தர் சின்னத்தைத் தங்கத்தால் செய்து என் மங்கல நாணில் அணிவித்தார்கள். அதற்குப் பிறகு எங்கள் குடும்பத் திருமணங்களில் புலிவில் கயல் அணிவது வழக்கமாகி விட்டது. திருமணம் முடிந்து முதன் முறையாக என் கணவரோடு பிறந்தகம் சென்று சில நாட்கள் மகிழ்ச்சியோடு தங்கியிருந்துவிட்டுப் புக்ககத்துக்குப் புறப்பட்டேன். இருபதாண்டுகள் இருந்து பழகிய வீட்டையும் உறவையும், குறிப்பாக என் அன்புத் தந்தையாரையும் பிரிந்து வருவது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது; என் தந்தையாருக்கும் என் பிரிவு மிகவும் வேதனையைக் கொடுத்திருக்க வேண்டும். வழியனுப்பிவிட எங்களோடு வந்த தந்தையார், விழுப்புரம் வந்ததும் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே சென்று விட்டார். என்னிடம் சொல்லிக் கொண்டால் நான் கண்ணிர் விடுவேன் என்று அவர் எண்ணியிருக்கலாம். தந்தையார் என்னிடம் சொல்லிக்கொள்ளாமலே போய்விட்டதால் எனக்கு வருத்தம். கட்டிப்பாளையம் சென்றதும் நான் தந்தையாருக்குக் கடிதம் எழுதவில்லை. தம்பி தங்கையரின் நலன் விசாரித்து அம்மாவுக்கு கடிதம் எழுதினேன். சென்னையிலிருந்து திரும்பிவந்த தந்தையார், நான் அம்மாவுக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பார்த்தவுடன் என் வருத்தத்தைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். என் வருத்தத்தைப் போக்க ஆதரவோடு அன்புக்கடிதம் ஒன்று வரைந்தார். 'அம்மா! உன் பிரிவு என்னை மிகவும் வருத்துகிறது. உன்னைக் கணவன் வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் புதுவையில் இருக்கும் நான் வலிய தோளும் வாளும் இழந்த படைவீரன்போல் இருக்கிறேன் என்று எழுதியிருந்தார். இவ்வரிகளைப் படிக்கத் தொடங்கியதும் என் கண்கள் நீர்க்குளமாகிவிட்டன. நினைக்கும்போதெல்லாம் நெஞ்சை