பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ыпФедһай-sqьusossusoёвұрғыһ - 171 அளவிறந்த பற்றின் காரணமாக கீழ் வகுப்புகளுக்கே என் தந்தையார் ஆசிரியராக இருப்பதுண்டு. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியரான பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் இதைப் பற்றிக் குறிப்பிட்டு, “என்ன? பாரதிதாசன் அட்டைக் கிளாஸ் வாத்தியார் தானே' என்று ஒருமுறை கேவலமாகப் பேசிவிட்டார். பண்டிதமணி அடுத்த முறை கூட்டத்தில் பேசப் புதுச்சேரிக்கு வந்தபோது, கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து, அவ்வாறு பேசியதற்காக அவரை மன்னிப்புக் கேட்கும்படி செய்தார்கள். ஏழை மாணவர்கள்பால் என் தந்தையாருக்கு எப்போதும் அன்பும் பரிவும் உண்டு. தேர்வு மேற்பார்வையாளராக இருக்கும்போது ஏழைப் பிள்ளைகளுக்கு இவரே சொல்லிக் கொடுத்து மதிப்பெண் போட்டுத் தேர்விலும் வெற்றியடையும்படி செய்து விடுவார். ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்கும் சில பெண்கள், தனிப் படிப்புக்காக வீட்டுக்கு வருவதுண்டு. அவ்வாறு வரும் பெண்களுக்குக் கல்வியோடு பண்பாட்டையும் புகட்டுவது இவர் வழக்கம். பெண்கள் இரட்டைச் சடை போட்டுக் கொண்டு வந்தால் இவருக்குப் பிடிக்காது. உடம்பு மறைய ஆடை உடுத்த வேண்டு மென்று வற்புறுத்துவார். பெண்களுக்கு அலங்காரம் தேவை யில்லை; தாயுள்ளமே தேவை. என்று அடிக்கடி கூறுவார். என் தந்தையார் எதற்கும் கண்கலங்கமாட்டார். என் தங்கை ரமணிக்குப் பிறகு, பிறந்த கைக்குழந்தையொன்று ஏழு திங்களில் இறந்தபோது கூட அவர் கண்கலங்கவில்லை. ஆனால் பாரதியாரைப் பற்றி யாராவது பேசினால் அழுவார். சாகிறேன் என்று யாராவது சொன்னால் பேடித்தனம் என்பார். ஆடை, மீசை ஆகியவற்றின் மீது என் தந்தையார் அதிக அக்கறை காட்டுவது வழக்கம். அவர் அணியும் மேற்சட்டை (Long Coat) அவர் விருப்பப்படி தைக்கப்பட வேண்டும்.அவர் விருப்பத்துக்குக் கொஞ்சம் மாறாக இருந்தாலும், துக்கித் தையற்காரன் முகத்தில் வீசி எறிந்துவிடுவார். அவருடைய மீசையை ஒழுங்கு செய்யும்போது சவரத் தொழிலாளி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்குக் கடுமையான கோபம் வந்துவிடும். மீசை ஒழுங்காக வெட்டிவிடப்பட்டிருக்கிறதா? என்று 0 புதுவையில் முதல் வகுப்பு ஆசிரியரை அட்டைக் கிளாஸ் வத்தியார் என்று பொதுவாகத் குறிப்பிடுவது ங்கம், பாவேந்தர் எப்போதும் கந்து அல் - -