பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 பாடிப் பறந்த குயில் திருமதி வசந்தா தண்டபாணி மறைமலையடிகளின் மகளார் நீலாம்பிகை அம்மையார் தம் தந்தையைப் போல் எழுத்தாற்றல் பெற்றவர். பாவேந்தரின் புதல்வியருள் எழுத்தாற்றல் வாய்க்கப் பெற்றவர் இவரே! பாவேந்தரின் வாழ்க்கை வானில் நாள்தோறும் பளிச்சிட்ட வரலாற்று மின்னல்களை, இவர் வரைகோட்டுப் படமாக்கி அடிக்கடி செய்தித் தாள்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். சுவையான நிகழ்ச்சிகளைத் தெரிந்தெடுத்துச் சுவை யாகச் சொல்லும் ஆற்றல் இயல்பாகவே இவரிடம் அமைந்திருக்கிறது. இக்கட்டுரையில் தம் தந்தை யாரைப் பற்றிய சில செய்திகளை நினைவுபடுத்திக் கூறியுள்ளார். நானும் என் தங்கை ரமணியும் பள்ளிச் சிறுமிகளாக இருந்த நேரம். நான் எப்போதும் பள்ளிக்கு ஒழுங்காகச் சென்றுவிடுவேன். தங்கை ரமணி அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போட்டுவிடுவாள். இதையெல்லாம் கவனிப்பதற்கு என் தந்தையாருக்கு நேரமிருக்காது. ஆசிரியர் தொழிலும், அரசியலும், கவிதையும் அவருக்குச் சரியாக இருக்கும். ஒருநாள் நான் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண் டிருந்தேன். என் தங்கை ரமணி பள்ளிக்குப் புறப்படாமல் முரண்டுபிடித்துக் கொண்டிருந்தாள். தந்தையார் அறைக்குள் உட்கார்ந்து மும்மரமாக எழுதிக் கொண்டிருந்தார். என் தாயார் கூச்சலிடத் தொடங்கினார். 'பள்ளிக்குப் போகாம சின்னப் பொண்ணு ஏமாத்திக்கிட்டிருக்கிறா. நீங்க அதைப்பத்தி கொஞ்சமாவது அக்கறை எடுத்துக்கறிங்களா.. உங்க வேலையுண்டு நீங்க உண்டுண்ணு இருந்தா பெண்களோட படிப்பு என்னாகறது?”