பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 175 அவரிடம் கவிஞருக்குப் பிடிக்காத அம்சம் ஒன்று உண்டு! அது நீ பயப்படாதே சுப்புரத்தினம் என்று அவர் சொலவது தான். சோதிடர் நெடுநாளைய நண்பர் என்பதோடு, கவிஞரை விட வயதில் மூத்தவர். இவற்றையெல்லாம் கருதி கவிஞர் ஒன்றும் சொல்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்து விடுவார். ஒருநாள் கவிஞருக்குப் பள்ளி விடுமுறை. வழக்கப்படி சோதிடப் புலி வந்தது. கவிஞரும் அவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். வழக்கப்படி சோதிட நண்பர், “சுப்புரத்தினம்! நான். பிள்ளை வீட்டுக்குப் போனேன். எலக்சியம் (தேர்தல்) சம்பந்தமாகப் பேசிக்கிட்டிருந்தோம். அவரை எதிர்த்து நிக்கிறவன் சாய்கால் உள்ள ஆளாம்! கொஞ்சம் கவலைப்பட்டார். நான் சொன்னேன். பயப்படாதே! உனக்கு இன்ன ராசியில இன்னார் இருப்பதால்...!! என்று நிறுத்தினார். கவிஞர் எதிர்நோக்கியிருந்த நேரம் வாய்த்துவிட்டது. திடுமென்று சாய்வு நாற்காலியை விட்டு எழுந்து விட்டார். “ஏண்ணே(ன்) உனக்கு கொஞ்சமாவது அறிவு கிறிவு இருக்கா? எவ்வளவு பெரிய ஆள் அவன்! இந்த சோசியத்தை நம்பியா பொலீத்திக் (அரசியல்) பண்றான்! நிலைமையை உங்கிட்ட சொன்னான். அதுக்கு நீ பயப்படாதேன்னு சொன்னா என்ன அருத்தம்? நீ வந்தா, இது இப்படியிருக்கு அப்பா! அதுக்குத் தகுந்தமாதிரி நடந்துக்கோன்னு சொல்லணுமே தவிர, நீ பயப்படாதே"ன்னு சொன்னா அது தப்பில்லையா? ஒருவன் சோசியத்தை நம்பிப் பயந்து விடுகிறான் என்றோ துணிச்சலா இருக்கிறான் என்றோ சொன்னால் அவனை மடையன் என்றுதா சொல்லணும்' என்று காட்டமாகத் தாக்கி விட்டார். வெலவெலத்துப் போய்விட்டார் சோதிடர். "சுப்புரத்தினம்! நான் கிழவன்! கோவிச்சுக்கிறாதே! நீ சொல்றதும் சரிதான்! எல்லோரும் பயந்துக்கிட்டேயே இருக்காங்க! ஆனா, உன்னைப்போல இருக்கிறவங்ககிட்ட அப்படிச் சொல்லுவது தப்பு தான்!” என்று அழாக்குறையாகச் சொன்னார் சோதிடர். "அது இருக்கட்டும் அண்ணே! நீ கையைக் கழுவிக்கிட்டுவா, சாப்பிடலாம்" என்று சோதிடர்தலையில் ஐஸை வைத்தார் கவிஞர். எதற்கும், எங்கும், யார்க்கும் அஞ்சுவது என்பதே அவர் வாழ்க் கையில் இருந்ததில்லை என்பதற்கு இந்நிகழ்ச்சி சரியான சான்று. 1955ஆம் ஆண்டு புதுவையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் কনকলট ননয়Ruuio Giu tத்திக் என்ற இரண்டு - ம் பிரெஞ்சுச் * *