பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 அச்சம் அவர் அறியாதது திரு. மன்னர் மன்னன் இவர் பாவேந்தர் என்ற இலக்கியப் பேராற்றின் வடிகால்; புரட்சித் தென்றலில் பூத்த இளவேனில், தேன் கவிதை தீட்டிய கனக சுப்புரத்தினத்தின் ஆண் கவிதை! இவர் கவிதை மொழியான ஃபிரெஞ்சையும், கரும்பு மொழியான தமிழையும் கற்றுத் தெளிந்தவர், இவருக்குப் பால்ஸாக்கையும் பிடிக்கும்; பரணரையும் பிடிக்கும். பாவேந்தர் தம் வாழ்க்கையில் காதலோடு தொகுத்த பாட்டுக் குறுந்தொகையான இவர், இன்று பாவேந் தரின் வாழ்க்கை வரலாற்றையும் படைப்புகளையும் தொகுத்துக் கொண்டிருக்கிறார். நான்கைந்து முத்துக்களைக் கோத்துக் கோத்துப் பாவேந்தர் நளினமாக எழுதிய உரைநடை, இவர் கையிலும் கொஞ்சி விளையாடுகிறது. அச்சத்தை அறியாத பாவேந்தர் மாலையில், இக் கட்டுரை மணமிக்க ஒரு பிச்சிப்பூ! நான்கு வயதுக் குழந்தையாக நானிருந்தபோது, 'நீ சாமிக்குப் பயப்படுவாயா? எனக்குப் பயப்படுவாயா?” என்று ஒரு பையன் என்னைக் கேட்டான். அதை நான் என்தந்தையாரிடம் சொன்னேன். உடனே "எவனுக்கும் நான் பயப்பட மாட்டேன்' என்று விடையிறுக்கச் சொல்லி எனக்கு மனவலிமை அளித்தவர் கவிஞர். நெஞ்சுரமிக்க அவரை நினைக்கும்போதெல்லாம் அவரின் எழுத்தாற்றலுக்கு வித்தாக அமைந்த நிகழ்ச்சிகள் இன்றும் என்னுள்ளத்தில் படமாடிக் கொண்டிருக்கின்றன.