பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 18] குதித்துவிட நினைத்தேன். கோவிலுக்குள்ளே வந்து விட்டான் மயூரேசன். கண் இமைக்கும் நேரம். மிக உயர்ந்த மதிற்கூவரினின்று கீழே குதித்தேன் ஒட்டமாக ஒடிப் பாரதி வீட்டிற்குள் புகுந்தேன். வெகுநேரங் கழித்து மாடசாமியை மீட்டு வீடு வந்து சேர்ந்தேன். மறுநாள் பாரதி என்னைப் பார்த்து, "மீண்டும் இந்த உயரத்திலிருந்து உன்னால் குதிக்க முடியுமா? உனக்குள் கனன்று கொண்டிருந்த புரட்சி எண்ணம் உன் காலுக்கு வலிமையூட்டியுள்ளது?’ என்று கூறினார். மக்கள் நலனுக்கான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துவதில் பாவேந்தர் மிகவும் துணிச்சலானவர்; எத்தகைய எதிர்ப்புக்கும் அஞ்சாதவர். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. தேவிகுளம் பீர்மேட்டைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்பதற்காக ஒரு கடையடைப்புப் போராட்டத்தைப் பாவேந்தர் புதுவையில் நடத்தினார். புதுவையில் அனைத்துக் கட்சிகளையும், ஒன்றுபடுத்திக் கிளர்ச்சி அமைதியான முறையில் நடைபெறத் திட்டம் வகுத்திருந்தார். அவரே வீதி வீதியாய்ச் சென்று ஏற்பாடுகளைக் கவனித்தார். "ஊர்வலம் செல்வதற்குப் போலீஸ் வழங்கிய ஆணையில் சில வீதிகளைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அந்த வீதிகளில்தான் போக வேண்டும்" காவல்துறை அதிகாரி இப்படி எச்சரித்தார். "அப்படியே செய்வோம்” கூறிவிட்டு ஒரு சிற்றுண்டி விடுதி நோக்கிச் சென்றார் பாவேந்தர். "நீங்கள் விதிமுறையை மீறி இப்போது போகிறீர்கள்" என்று மறுபடியும் சற்றுக் கண்டிப்பாகக் கூறிய அதிகாரி, தந்தையாரின் எதிரில் போய் நின்றார். பாவேந்தர் சொன்னார்: நான் வீதியில் நடக்கவும் கூடாதா? அதிகாரி. நீங்கள் நடக்கிறீர்கள். உங்களின் பின்னால் சில ஆயிரம் பேர் வருகிறார்களே? பாவேந்தர். அதற்கு நானென்ன செய்வது? அதிகாரி: இது ஒர் ஊர்வலமாகிவிட்டது என்கிறேன் நான்.