பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 அச்சம் அவர் அறியாதது பாவேந்தர்: ஊரிலிருக்கின்ற அத்தனை கடைகளும், நிறுவனங்களும் சாத்தப்பட்டிருக்கையில் ஒரே ஒர் ஒட்டல் மட்டும் திறந்திருப்பதைப் பார்க்க வருகிறார்கள் மக்கள். அதிகாரி. நீங்கள் இந்தப் பகுதியிலிருந்து போய் விட்டால் மக்கள் கூட்டம் கலைந்து போய்விடும். பாவேந்தர்: நான் ஒன்று சொல்கிறேன். இந்த ஒரே ஒரு கடையும் மூடப்பட்டு விட்டால் மக்கள் கூட்டம் கலைந்துவிடும். அதிகாரி: கடையைத் திறந்து வைத்திருப்பது தனியொருவரின் விருப்பம். காவல்துறை அதிகாரியுடன் கவிஞர் ஏதோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட மக்கள், ஏதோ நடக்கப் போகிறது என்று கருதி இவர்களைச் சூழ்கிறார்கள். காவல் அதிகாரி இவரிடம் முறையின்றிப் பேச்சுக் கொடுத்து விட்டதை உணர்கிறார், கவிஞர்பால் அந்த அதிகாரிக்கு ஈடுபாடு உண்டு. ஆனால் அவருக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமே! அவர் இதை யோசித்துக் கொண்டிருக்கையில், "ஏம்பா..." என்ற இடிக்குரலை எழுப்பிச் சிற்றுண்டி விடுதியில் நுழைகிறார் பாவேந்தர். கடை உரிமையாளர் கவிஞரின் நண்பர்தான். அவர் கேட்கிறார்: "நான் கடையை மூடிவிட்டால் தேவிகுளம் பீர்மேடு பகுதியைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து விடுமா அரசாங்கம்? சொல்லேன் சுப்பு!” பாவேந்தருக்குச் சினம் பொங்கிவிட்டது. அடாவடிப் பேச்சன்றோ இது? "நீயா சாத்தினா கிடைக்காது. நாங்க கேட்கிற உரிமை! நான் சாத்தினா, கிடைச்சிடும்! வீண் வம்பை வளர்க்காதீங்க!' என்று எச்சரிக்கை விடுத்தார் பாவேந்தர். கடை சாத்தப்பட்டு விட்டது. மறுநொடியில் வெளியில் காத்திருந்த மக்கள், ஊரில் வேறு எங்காவது கடைதிறந்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்துவரக் கலைந்து சென்று விட்டனர். ஒரு சிறிய வெற்றிலை பாக்குக் கடையும் இல்லை... மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன விதிகள்.