பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 17 பாவேந்தரைப் பற்றிக் கூறும் செய்திகளைத் தொகுத்துக் கொண்டு வருவது என் வழக்கம். நான் மேற்கொண்ட இம்முயற்சியிலிருந்து ஒர் உண்மை எனக்குப் புலனாயிற்று. சங்ககாலந் தொட்டு இன்று வரை பாவேந்தர் போல மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட கவிஞர் வேறு யாரும் இல்லை என்பதே அது! நான் இதைப் பாவேந்தர் மீது கொண்டிருக்கும் அளவிறந்த பற்றின் காரணமாகக் கூறியிருப்பதாகக் கருதக் கூடாது. நன்கு ஆராய்ந்து இக்கருத்தைக் கூறுகிறேன். பாவேந்தர் கவிஞர் மட்டுமல்லர் அவர் ஒர் அரசியல்வாதி; ஆசிரியர்; பத்திரிகாசிரியர்; நாடகாசிரியர்; திரைப்பட எழுத்தாளர்; பதிப்பகர்; மேடைப் பேச்சாளர். இத்துணை துறைகளிலும் ஈடுபட்டுச் செயலாற்றிய கவிஞர் தமிழகத்தில் வேறு யாருமில்லை. இவரது பல்துறை ஈடுபாட்டால் தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் இவரோடு ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்பு கொண்டவர்கள் பரந்து கிடக்கிறார்கள். ஆப்பக்காரியிலிருந்து அமைச்சர் வரை இப்பட்டியல் நீளுகிறது. இதைநான் ஏதோ எதுகை மோனைக்காகக் கூறியதாக நினைக்க வேண்டாம். திருச்சி சிந்தாமணியில் பாவேந்தர் வழக்கமாகச் சென்று ஆப்பம் சாப்பிடும் ஒரு கடையின் சொந்தக்காரியைக் கண்டு பேசும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. சேலத்துக் குதிரை வண்டிக்காரன் ஒருவன் கூறினான், 'ஐயா, என் வண்டியிலதான் ஏறிக்கிட்டுப் போவார். மாடர்ன் கேஃபிலே டிஃபன் சாப்பிடுவார்; காஃபி குடிக்கறத்துக்காகவே வில்வாத்திரிக்குப் போவார். மிலிட்டரி சாப்பாட்டுக்கு வி. மார்க்கெட்டில இருக்கற நித்தியானந்த பவனுக்குப் போவார். அந்தக் காலத்திலேயே எனக்கு ஒரு ரூபா வாடகை கொடுப்பார்' - என்று. பாவேந்தர் வரலாறு இப்படித் தமிழ்நாட்டு மூலை முடுக்கெல்லாம் சிதறிக் கிடக்கிறது. அதைத் திரட்டுவதென்பது தனிப்பட்ட ஒருவரால் நடைபெறக்கூடிய செயலன்று. அரசாங்கமே ஒரு குழு அமைத்துச் செய்ய வேண்டிய வேலை. பாவேந்தரைப் பற்றிய செய்திகளைத் திரட்டும்பணி எனக்கும் அவ்வளவு எளிதாக இருந்ததில்லை. பாவேந்தரோடு பழகிய நண்பர்கள் பல திறப்பட்டவர்கள். சிலர் அவர்களே விரும்பிச்