பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|B6 பாவேந்தர்பற்றி.! திருச்சியில் நாங்கள் மணிவிழா எடுக்க முடிவு செய்திருந்த அதே நாளில், நடிகர் யதார்த்தம் பொன்னுசாமி என்பவர் தஞ்சையில் பாவேந்தருக்கு மணிவிழா எடுக்கப் போவதாகச் செய்தி விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இச்செய்தியைப் பார்த்ததும் எனக்குப் பெரிய குழப்பமாக இருந்தது. உடனே புதுவை சென்று பாவேந்தரை நேரில் கண்டு இதைப்பற்றி அறிந்துவரச் சொன்னேன். அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை. அவர் ஏமாற்றப்பட்டிருக் கிறார் என்று தெரிந்தது. நான் விழாக்குழுவிலிருந்தே ஒதுங்கிக் கொண்டேன். திருச்சியில் ஒரு வாரம் பாவேந்தர் விழாவை நடத்த விழாக் குழுவினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாடகங்கள் நடத்தி ஓரிலக்கம் ரூபாய் திரட்டி அவருக்கு மணிவிழாவில் நன்கொடை வழங்கப்போவதாக அவரிடம் கூறியிருந்தார்கள். ஆனால் அவ்விழா திட்டமிட்டபடி நடைபெறவில்லை. நாடகம் நடத்தியவர்களுக்கும், இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பாவேந்தர் கோபித்துக் கொண்டு திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவலுக்குச் சென்று அங்கு தங்கியிருந்தார். நாடகம் நடத்தியவர்களுக்கும் இவருக்கும் பண விஷயத்தில் தகராறு. இதை நடுவிலிருந்து சில நண்பர்கள் தீர்த்து வைக்க முயற்சி செய்தனர். முடியவில்லை. கடைசியில் நாடகம் நடத்தியவர்கள் ஏதும் தரவில்லை. நான் வசூலித்த ரூ. 1500 ஐயும் விழாக்குழுவினர் கையில் கொடுத்தேன். மணிவிழா மிகச்சுருக்கமான அளவில் திருவானைக்காவல் சத்திரத்தில் நடத்த ஏற்பாடு செய்தார்கள். நான் வந்து பொன்னாடை போர்த்த வேண்டும் என்று விரும்பிப் பாவேந்தர் சொல்லியனுப்பினார். நான் மறுத்துவிட்டேன். புலமை வேறு; உலகியல் அறிவு வேறு என்பதற்கு இம் மணிவிழா நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு. தமிழகப் புலவர் குழுவின் இரண்டாவது கூட்டத்தைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நடத்தினேன். புலவர் பெருமக்கள் நாற்பத்தெண்மரும் தேரேறி ஊர்வலம் வர, கூட்டத் தலைவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் யானை மீது அமர்ந்து தஞ்சை அரச வீதிகளில் உலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி: தஞ்சை நகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. வழிநெடுகத் தண்ணீர்ப் பந்தல் வாழையும் கமுகும் நாட்டப்பட்ட அலங்காரப் பந்தல்! மக்கள் பூவும் கற்கண்டும் வாரி இறைத்தனர், திலகர் திடலில் விழா நடைபெற்றது. இனி அக்காட்சியை...? பாரதிதாசன் தோற்றமே தமிழனின் தோற்றம். அவரது வீரம்